உடல் பருமன் இன்று ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்பகிறது. ஏனெனில், உடல் பருமன் தான் உடலில் முக்கால்வாசி பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. உடல் பருமனால், உடல் நோய்களின் கூடாரமாகி விடும். உடல் பருமனுக்கு முக்கிய காரணம் உணவு முறை இருந்து மோசமான வாழ்க்கை முறை, என பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முக்கியமாக உணவு பழக்கம் காரணமாக உடல் பருமன் மிக அதிகமாகிறது. அதைக் கட்டுப்படுத்த நினைத்தால், முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவு முறையில் தான். அதிலும் காலை உணவு உடல் பருமனைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில், மைதாவினால் ஆன பிரெட் என்பது, உடல் பருமனை குறைக்க முதலில் உணவில் இருந்து நீக்கப்படும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் இப்போது ரொட்டியை உணவில் சேர்த்துக் கொண்டாலும் எடையைக் குறைக்கலாம். இதற்கு என்ன ரொட்டிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க உதவும் பல ரொட்டிகள் சந்தையில் உள்ளன. இதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்
கீழெ குறிப்பிட்டுள்ள ஆரோக்கியமான ரொட்டிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.
முழு தானிய ரொட்டி
முழு தானிய ரொட்டி (Whole Grain Bread) என்ற பெயரைக் கேட்க விசித்திரமாகத் தோன்றியிருக்க வேண்டும். இந்த ரொட்டி சந்தையில் எளிதாகக் கிடைக்கும். இந்த ரொட்டி தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. இந்த ரொட்டி கம்பு, ஓட்ஸ், குயினோவா, தினை மற்றும் பார்லி மாவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புரதம் முதல் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் இதில் ஏராளமாக காணப்படுகின்றன. இவை உடல் எடையை குறைப்பதில் (Weight Loss) பயனுள்ளதாக இருக்கும். தவிடு நீக்கப்படாத தானியங்களையே முழு தானியம் என்கிறோம். பல தானியங்களில், அதன் ஊட்டச்சத்துக்கள், அவைகளை மூடியுள்ள தவிட்டில் தான் அதிகம் உள்ளன. தானியங்களை சுத்திகரிக்கும் போது, அதன் மேலுள்ள தவிடு நீக்கப்பட்டுவிடுவதால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. மேல் தோல் நீக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிகமான நார்ச்சத்தும் அதில் உள்ளது. இந்த நார்ச்சத்து, நமது உடலின் செரிமான செயல்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.
மேலும் படிக்க | கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!
முழு கோதுமை ரொட்டி
முழு கோதுமை ரொட்டி (Whole Wheat Bread) முழுமையான கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதனுடன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் தான் காலை உணவில் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இது நீண்ட நேரம் பசியை அனுமதிக்காது. அதனால் உடல் எடை குறைக்கிறது. முழு கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் ரொட்டி உடல் எடை குறைப்புக்கு சிறந்த உணவாகும். இதிலுள்ள, புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்து எடை இழப்புக்கு உதவுகிறது.
முளைகட்டிய தானிய ரொட்டி
முளை கட்டிய தானியம் என்ற பெயரைக் கேட்டாலே ஆரோக்கியமான உணவு முறையில் அவசியம் சேர்க்க வேண்டியவை என்பதை அனைவரும் அறிவார்கள். முளை கட்டிய மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது. இந்நிலையைல், முளை கட்டிய தானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிரெட்கள் (Sprouted Bread) தற்போது சந்தைக்கு வந்துள்ளன. பீன்ஸ், விதைகள் மற்றும் முளை கட்டிய தானியங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரொட்டி எடையைக் குறைக்க உதவும். ஆனால் எந்த அளவிற்கு உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ