அதிக கொலஸ்ட்ரால் அளவை அதிரடியாய் குறைக்கும் சில இயற்கையான வழிகள் இதோ
Cholesterol Control Tips: உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இவற்றால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Cholesterol Control Tips: இன்றைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றில், இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், மன அழுத்தம், யூரிக் அமிலம், இரத்த கொதிப்பு ஆகியவை முக்கியமானவையாகும். குறிப்பாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவது மிக பொதுவான ஒரு விஷயமாகி வருகிறது.
நாம் உட்கொள்ளும் பல வித உணவுகளில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமானால், அது நரம்புகளில் குவிந்து இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றது. உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இவற்றால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நரம்புகளைச் சுத்தப்படுத்தவும் உதவும் பல இயற்கையான உணவுகள் உள்ளன. கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் அப்படிப்பட்ட சில சிறந்த இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இயற்கை உணவுகள்:
பச்சை காய்கறிகள் (Green Vegetables)
கீரை, வெந்தயம், கொத்தமல்லி, பாகற்காய், பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. மேலும் பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் இரத்த அழுத்தமும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகின்றது.
பழங்கள் (Fruits)
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை மற்றும் மாதுளை போன்ற பழங்கள் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இவற்றில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு ஹீமோக்ளோபின் அளவையும் அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | 828 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று! 47 பேர் மரணம்..நோய் பரவியது எப்படி?
ஓட்ஸ் (Oats)
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. ஓட்ஸ் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க உதவுவதோடு நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கும் பணியையும் செய்கிறது.
கொட்டைகள் மற்றும் விதைகள் (Nuts and Seeds)
பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் மற்றும் சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகள் ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பூண்டு (Garlic)
பூண்டில் அலிசின் என்ற கலவை உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் இது இரத்தத்தை மெலிதாக்கவும் உதவுகிறது. பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவியாய் இருக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ