இந்த உணவுகள் கொல்ஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கும், ஜாக்கிரதை!! டாக்டரின் அட்வைஸ்

Cholesterol Control Tips: சமீபத்தில் ஒரு மருத்துவர் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்களே நமது கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2024, 04:59 PM IST
  • கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை?
  • இதற்கு நிவாரணம் என்ன?
  • முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
இந்த உணவுகள் கொல்ஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கும், ஜாக்கிரதை!! டாக்டரின் அட்வைஸ் title=

Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் பல வித நோய்கள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. அவற்றில் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் ஒன்றாகும். உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால், அதனால் மாரடைப்பு உட்பட பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகையால் கொலஸ்ட்ரால் அளவை எபோதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். 

நாம் உட்கொள்ளும் பல வித உணவுகளில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு நமது சமையலறையில் எந்த உணவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பதை நாம் அடையாளம் காண்பது மிக முக்கியமாகும். 

சமீபத்தில் ஒரு மருத்துவர் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்களே நமது கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த உணவுகளை நமது டயட்டிலிருந்து எப்படி தவிர்ப்பது என்பது பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நாம் எந்த வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தும் பல உணவுகளை அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளதால், நமக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கு அந்த உணவுகள் எவை? இதற்கு நிவாரணம் என்ன? முழு விவரங்களையும் இங்கே காணலாம். 

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த நாம் குறைக்க வேண்டிய உணவுகள்:

தேங்காய் எண்ணெய் (Coconut Oil)

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்பாகக் கருதப்படுவதாக பரவலான ஒரு கருத்து உள்ளது. ஆனால் இப்போது அது அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. ஆகையால்  கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைப்பவர்கள், தேங்காய் எண்ணெய் மற்றும் அதைக் கொண்டு செய்யப்படும் உணவுகளை குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. 

பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள், பேக்கரி தின்பண்டங்கள் (Packed Food Items)

பேக் செய்யப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கின்றன. பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், குக்கீகள், கேக்குகள், க்ரேக்கரஸ், சிப்ஸ் போன்ற பேக்கரி ஸ்னேக்ஸ் மற்றும் பிற ஸ்னேக்சுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. இந்த கொழுப்புகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதோடு இதய நோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கான அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 

சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி (Red Meat, Processed Meat)

அசைவ உணவு உட்கொள்ளும் அனைவரும் பெரும்பாலும் இவற்றை உட்கொள்வது வழக்கம். ஆனால் இவற்றால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. தொத்திறைச்சி, ஹாட் டாக் மற்றும் பன்றி இறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் ஆகியவற்றிலும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை அதிகமாக உள்ளன.

மேலும் படிக்க | பலூன் போன்ற உடலை பக்குவமா குறைக்க உதவும் பூண்டு: இப்படி சாப்பிடுங்க போதும்

சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் (Sugar Drinks)

இனிப்பு சோடா, சாறுகள், ஆற்றல் பானங்கள் ஆகியவற்றில் அதிக அளவு பிரக்டோஸ் இருக்கின்றன. இவற்றை உட்கொள்வதால், இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கின்றது. ட்ரைகிளிசரைடுகள் ஒரு வகை கொழுப்பாகும். இதன் மூலம் உடலின் கொலஸ்ட்ரால் அளவு பாதிக்கப்படலாம். 

வறுத்த உணவுகள் (Fried Foods)

வறுத்த உணவுகளில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு உள்ளது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். வறுத்த உணவுகளுக்கு பதிலாக, வேகவைத்த அல்லது க்ரில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கலப்பட ரசாயன காய்கறிகளை அடையாளம் காண்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News