வேகவேகமா உடல் எடையை குறைக்க இந்த டிப்ஸ் கண்டிப்பா உதவும்
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் நாம் செலுத்தும் கவனத்தை என்னென்ன செய்யக்கூடடாது என்பதில் செலுத்துவதில்லை. இதனால் உடல் எடை குறைவதற்கு பதிலாக மீண்டும் அதிகமாகின்றது.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளில் சிறு தவறுகள் எற்பட்டாலும், முழு பலனை அடைய முடிவதில்லை.
தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க சிலர் தினமும் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் நாம் செலுத்தும் கவனத்தை என்னென்ன செய்யக்கூடடாது என்பதில் செலுத்துவதில்லை. இதனால் உடல் எடை குறைவதற்கு பதிலாக மீண்டும் அதிகமாகின்றது. உடல் எடையை குறைக்க எண்ணும் நபர்கள் முக்கியமான சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நாம் எடுக்கும் கூடுதல் முயற்சிகளுடன் நம் அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் நாம் செய்யும் தவறுகளால் உடல் பருமன் அதிகரிக்கலாம். எடை இழப்பு (Weight Loss) செயல்முறையின் மூலம் வெற்றி காண நாம் கவனமாக இருந்து தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
போதுமான தூக்கம்
போதுமான அளவு தூக்கம் (Sleep) இல்லாதபோது உங்கள் உடல் கிரெலின் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இது உங்களுக்கு பசியை ஏற்படுத்துகிறது. இதனால் இரவில் சாப்பிடத் தோன்றுகிறது. இது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது. கூடுதலாக, தூக்கமின்மை உங்கள் உடலில் லெப்டின் என்ற ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது.
உணவை சரியாக சாப்பிடாமல் இருப்பது
குறைவாக சாப்பிடுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது உண்மையல்ல. குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவதும், குறைவாக சாப்பிடுவதும் உங்கள் எடையை ஆரம்பத்தில் குறைக்கலாம், ஆனால் சில நாட்களுக்கு பிறகு, உணவின் அளவை சற்று அதிகரித்தாலும், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். ஆகையால், உடல் எடையை குறைக்கும் போது, அளவை குறைக்காமல், சமச்சீரான, குறைந்த கலோரி (Low Calorie) கொண்ட உணவை உட்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | முளை கட்டிய பயறு காலை உணவில் அவசியம் இருக்க வேண்டும்... முக்கிய காரணங்கள் இதோ!
ஒரே மாதிரியான உணவை உண்ணுதல்
உடல் எடையைக் குறைக்க ஒரே உணவைத் திரும்பத் திரும்பச் சாப்பிட்டால் சலிப்பு ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல், பல்வேறு விதமான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கும் போது, உங்கள் எடை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகையால், எப்போதும் உங்கள் உணவில் பல வகையான உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது சலிப்பைக் குறைக்கவும், ஜீரணிக்க எளிதாக இருக்கும் சமச்சீர் உணவை (Balanced Diet) உட்கொள்ளவும் உதவும்.
அனைத்து வித ஊட்டச்சத்துகளையும் சேர்ப்பது அவசியம்
ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து உணவு வகைகளும், அனைத்து வித ஊட்டச்சத்துகளும் அவசியம். சிலர் சில உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார்கள். இதனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். ஆகையால், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது நல்லது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி (Exercise) முக்கியம். அதனுடன் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல், அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும். எடை இழப்புக்கு உடல் செயல்பாடு மிக அவசியமாகும். இதன் மூலம் உடலின் இரத்த ஓட்டம் சமமாக இருபதோடு கூடுதல் கொழுப்பு சேர்வதும் தவிர்க்கப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ