தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டு இருக்கும் சத்தான உணவாக முட்டை உள்ளது. இருப்பினும், இதனை தினசரி சாப்பிடுவது நல்லதா என்று பலருக்கும் குழப்பம் இருக்கும்.  

 

1 /5

முட்டைகள் பல ஆண்டுகளாக இந்திய உணவில் முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன.  இவை உடலுக்கு தேவையான பல நன்மைகளை வழங்குகின்றன. சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுக்கு முட்டை நல்லது.   

2 /5

முட்டைகள் அளவில் சிறியதாகவும், மலிவானதாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு முக்கிய ஆற்றல்களை கொண்டுள்ளன.  முட்டையில் பலவிதமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.  

3 /5

முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது தான். இருப்பினும், கிட்டத்தட்ட 70 சதவீத மக்களுக்கு முட்டைகள் கொலஸ்ட்ரால் அளவைக் உயர்த்துவதில்லை என்று கூறப்படுகிறது.  எல்டிஎல் கொழுப்பில் சிறிது அதிகரிப்பு ஏற்படலாம்.   

4 /5

முட்டைகள் மூளையில் உள்ள மூலக்கூறுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் முட்டையில் உள்ள மஞ்சள் கரு வைட்டமின் ஏ சத்தை வழங்குகின்றன.    

5 /5

ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கான மதிப்புமிக்க ஆதாரமாக செயல்படுகின்றன. இரத்த அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றிக்கு  நன்மை பயக்கும்.