இங்கிலாந்தில் Coronavirus புதிய உருமாற்றம் பதிவு, லண்டனில் மூன்றடுக்கு லாக்டவுன்
இங்கிலாந்தில் Coronavirusஇன் புதிய உருமாற்றம் பதிவு, லண்டனில் மூன்றடுக்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது
தற்போதுள்ள கொரோனா வைரஸுக்கு இங்கிலாந்து மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிய நிலையில்,நாட்டில் கொடிய வைரஸின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) திங்களன்று இதனை அறிவித்தார்.
திங்களன்று, குறைந்தது 60 வெவ்வேறு உள்ளூர் அதிகாரிகள் கொரோனா வைரஸ் (coronavirus) தொற்றுநோய்களைக் கண்டதாகக் கூறினர், அவை புதிய மற்றும் அடையாளம் காணப்படாத மாறுபாட்டைக் கொண்டுள்ளன.
"இங்கிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த மரபணு திறமைகள் இருக்கின்றன. அதற்கு நன்றி, கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இது இங்கிலாந்தின் (England) தெற்குப் பகுதியில் வேகமாக பரவுகிறது" என்று ஹான்காக் கூறினார்.
புதிய மாறுபாடு குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) அறிவித்துள்ளது, மேலும் விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைக்கு, இது ஒரு மோசமான நோய் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. அதோடு, COVID-19 இன் புதிய மாறுபாட்டிலிருந்து தடுப்பூசிகளால் (vaccination) மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருந்தாலும்கூட, புதிய மாறுபாடு வேகமாக வளர்ந்து வருகிறது. "இந்த மாறுபாடு தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்ப பகுப்பாய்வு தெரிவிக்கிறது," என்று மாட் ஹான்காக் (Matt Hancock)கூறினார்.
பிற எம்.பி.க்கள் முன்னிலையில் பொது மன்றத்தில் ஹான்காக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "தற்போது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை அடையாளம் கண்டுள்ளோம், கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் பகுதிகளில் இந்த புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.
"புதிய மாறுபாட்டின் காரணமாக இது எந்த அளவிற்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதன் காரணத்தை பொருட்படுத்தாமல் நாம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியமானது"
இதைத் தவிர, வழக்குகள் அதிகரித்து வருவதால், தலைநகர் லண்டனில் மூன்று அடுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. COVID-19 க்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி (Pfizer vaccine) பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல் அளித்த கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த செய்தி வந்துள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR