அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது...!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2020, 09:38 PM IST
  • உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.
  • அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது...!! title=

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பைசர் (Pfizer) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.  இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா, உலகிற்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் (America)முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது. 

தற்போது, நாட்டின் பல்வேறு மாகாணங்களில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முன்னதாக, கடந்த 8ம் தேதி, மருந்து கட்டுப்பாட்டாளர்கள் Pfizer தயாரித்துள்ள, கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த பின்னர், பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. Pfizer-ரால் உருவாக்கப்பட்ட COVID தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடு பிரிட்டன் ஆகும்.

ஃபைசர்-பயோஎன்டெக் தயாரித்துள்ள கோவிட் -19 (COVID-19) தடுப்பு மருந்து , பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு தேவையான தர நிலைகள் அனைத்தியும் சிறப்பாக பூர்த்தி செய்துள்ளதாக MHRA டிசம்பர் 2 அன்று ஒப்புதல் வழங்கிய பிறகு, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ட்வீட் செய்து: "தடுப்பு மருந்துகள் அளிக்கும் பாதுகாப்பு மூலம்தான் நாம் நமது பழைய வாழ்வை மீட்டெடுத்து, பொருளாதாரத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று கூறினார். 

ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News