150CC-க்கு மேற்பட்ட பைக் ஓட்டிச் சென்று இறந்தால் இன்சூரன்ஸ் பணம் இல்லை!
150CC-க்கு மேற்பட்ட பைக் ஓட்டிச் சென்று இறந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று தனியார் நிறுவனம் கூறியுள்ளது.
விபத்தில் இறந்தால், இறந்தவரின் குடும்பத்திற்கு உதவும் விதமாக மற்றும் உயிர் காக்க எடுக்கப்படுவது காப்பீடு. வாகனங்களுக்கு இன்சூரஸ் கட்டாயமாக எடுக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது.
வண்டி, ஓட்டுபவர் மற்றும் எதிரில் வருபவருக்கு என அனைத்திற்கும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயம். தற்போது புதிய வாகனம் எடுக்கும் பொழுது 3rd பார்ட்டி என்று சொல்ல கூடிய எதிரில் வருபவருக்கு காப்பீடு 5 வருடங்களுக்கு கட்டாயமாக எடுக்கப்படுகிறது. மேலும், வண்டிக்கு 2 வருடங்கள் கண்டிப்பாக காப்பீடு எடுக்கபடுகிறது.
பம்பர் டு பம்பர் காப்பீடு எடுத்தால், வண்டி விபத்துக்கு உள்ளானால் அதனை காப்பீடு நிறுவனமே முழுவதுமாக சரி செய்து கொடுக்கும். வண்டியின் வயது கூட கூட காப்பீடு தொகையும் குறையும். மக்களின் பாதுகாப்பிற்க்காகவே காப்பீடுகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.
மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தையும் அனைவரும் எடுக்கவும் அரசு வலியுறுத்துகிறது.
மாநில, மத்திய அரசுகளே இலவச காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்துகின்றன. தனியார் நிறுவனங்களும் மருத்துவ காப்பீடு அளித்து வருகின்றன. விபத்தில் ஒருவர் இறந்தால், நாமினியாக இருக்க கூடியவர் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து தொகையை பெறலாம்.
அந்த வகையில் கடந்த வருடம் பைக் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு தொகையை கேட்டுள்ளனர். இதற்கு அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் அளித்த பதிலில், 150 CC வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடி ஆகும், இறந்தவர் 346CC பைக்கில் சென்று இறந்துள்ளார். இதனால் இந்த காப்பீடு செல்லுபடி ஆகாது என்று பதில் அளித்துள்ளனர். இதனை கேட்டு இறந்தவரின் குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
ALSO READ Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR