வயசானாலும் இளமையா அழகா இருக்க ஆசையா? இந்த ஒரு பொருளை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க!
Sesame for Health: எள் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றாலும், டாப் 10 ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
எள் மிகவும் ஆரோக்கியமானது. தினசரி உணவில் ஒரு குறிபிட்ட அளவு எள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சேர்த்துக்கொள்ளுங்கள். எள் எப்படி உணவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கேள்வி எழுகிறதா? அதற்கான பதில் தான் இந்தக் கட்டுரை.
எள் எண்ணெய் நிறைந்த விதைகள் ஆகும். உலகம் முழுவதும் பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிரது. இதில், தாவர அடிப்படையிலான புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் (ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உட்பட), உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ், தாதுக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டது.
எள் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றாலும், டாப் 10 ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தை பத்தி தெரியும்! ஆனா வாழைப்பழத்தோல் போக்கும் நோய்கள் எதுன்னு தெரியுமா?
ஊட்டச்சத்து நிறைந்தது
கால்சியம், புரதம், கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை என உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எள்ளில் அதிக அளவில் இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மற்றும் ட்ரிப்போபான் போன்ற இயற்கையான கரிம சேர்மங்களையும் கொண்டது எள்.
செரிமானத்தை மேம்படுத்தும் எள்
எள் விதைகளில் தரமான நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே, எள்ளை தினசரி அடிப்படையில் உண்ணும்போது, அது குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
வீக்கத்தைக் குறைக்கும் எள்
எள் விதைகளில் உள்ள செசாமால் போன்ற பண்புகள், அழற்சி ஏற்படாமல் தடுக்கின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும், கீல்வாதம் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கு எள் நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும்.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள எள் விதைகள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. எள்ளை அளவுடன் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், திடீரென ரத்த சர்க்கரை அளவு மாறுபடுவதைத் தடுக்கவும் உதவும்.
ஆரோக்கியம்
எள் விதைகளில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன, குறிப்பாக ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம், இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். எள்ளை தினசரி அடிப்படையில் உண்டு வருவது இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
வலுவான, அடர்த்தியான எலும்புகள்
எள்ளில் அதிக கால்சியம் இருப்பதால், இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகள் ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதற்கு பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பிற தாதுக்கள் எள்ளில் இருப்பதே காரணம் ஆகும்.
மூளை செயல்பாடு
எள்ளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக வைட்டமின் B6, மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியம்
வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள எள், எண்ணெய்ச் சத்தை அதிகமாகக் கொண்டுள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்து தோற்றத்தை இளமையாக பராமரிக்கிறது.
மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி
தூக்கப் பிரச்சனைகளுக்கு எள்
எள் விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வாய்க்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எள்
எள் விதைகளில் துத்தநாகம் உள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தினசரி சிறிதளவு எள்ளை உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும் என்பதோடு, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஓவர் எடையால் அவதியா? ஒரு மாதத்தில் இவ்வளவு எடைக்கு மேல் இழந்தால் ஆபத்து!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ