Weight Loss Tips: அதிக எடையுடன் இருப்பது உங்கள் தோற்றத்தை மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். இதனால் தன்னம்பிக்கை குறைவதுடன் நம் உடலை பல வித நோய்களும் ஆட்கொள்கின்றன. பலர் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் உடல் எடையை குறைக்க சரியான வழி எது என்று பெரும்பாலும் பலருக்குத் தெரிவதில்லை. இது தவிர, எடை குறைக்க விரும்பும் நபர்கள் அதற்காக கண்டதையும் செய்யாமல், தனது உயரத்திற்கு, வயதிற்கும் ஏற்ப எவ்வளவு எடை இயல்பானது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், தனது வாழ்க்கை முறைக்கு ஏற்ற எடை குறைப்பு முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
உங்களுடைய எடை இழப்பு பயணத்தை சுலபாகவும், எளிய வழியிலும் மேற்கொள்ள உதவும் சில குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒரு மாதத்தில் எவ்வளவு எடை இழப்பு ஆரோக்கியமானது? (How much weight loss is healthy in a month)
எடை இழப்பு குறித்து மக்கள் பல்வேறு வழிமுறைகளை முன்வைக்கின்றனர். ஆனால், அதிரடியாக பல முயற்சிகளை செய்து பல கிலோக்களை குறைவான நேரத்தில் குறைப்பது சரியா? இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படாதா? ஒரு மாதத்தில் எவ்வளவு எடை குறைப்பது ஆரோக்கியமானது? இப்படி பல கேள்விகள் நம்மிடம் இருக்கும். ஒரு மாதத்தில் 3-4 கிலோ எடை இழப்பு ஆரோக்கியமானதாக கருதப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை விட அதிகமாக எடை குறைந்தால் அதை ஆரோக்கியத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிக அதிக எடை அதிகர்ப்பு சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். தேவையான புரிதல் இல்லாமல் எடை இழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடல் நிலையை மோசமாக்கலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டுமே எடையைக் குறைக்க முடியும்.
எடை அதிகரிப்பதற்கான காரணம் (Reason of Weight Gain)
எடை ஏன் அதிகரிக்கிறது? அதன் முக்கிய காரணங்கள் என்ன? மன அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு, அதிகப்படியான உணவு, மோசமான உணவுகள், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, தைராய்டு, பிசிஓடி மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பல காரணங்களால் எடை அதிகரிக்கலாம். பொதுவாக, எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் இன்சுலின் எதிர்ப்பு, மன அழுத்தம் மற்றும் உணவில் உள்ள பிரச்சனைகள் என்று கருதப்படுகிறது. இதை எளிதாக இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைப்பது எப்படி? (How to Lose Weight)
உடல் எடையை குறைக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று விஷயங்களை சரிசெய்வது மிகவும் அவசியம். இவை ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவும்.
மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் (Mental Stress)
இன்றைய அவசர உலகில் வாழ்க்கையில் அழுத்தங்களும் இறுக்கங்களும் அதிகமாகிவிட்டன. அத்தகைய சூழ்நிலையில் மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. இது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க, உடற்பயிற்சி அல்லது வெளிப்புற விளையாட்டுகளை உங்கள் வாழ்க்கைமுறையில் சேர்க்கலாம். இந்த இரண்டு விஷயங்களால் உங்கள் கலோரிகளும் அதிகமாக எரியும், தொப்பை கொழுப்பு (Belly Fat) கரையும், உடல் எடையும் குறையும்.
இன்சுலின் பிரச்சினை (Insulin Resistance Issue)
இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க, உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த பொருட்களைச் சேர்க்கவும். பச்சைக் காய்கறிகள், தினை, சோளம், பார்லி, பருப்பு வகைகள், மக்கானா மற்றும் சாலட் போன்றவை உங்கள் தினசரி உணவில் இருக்க வேண்டியது மிக அவசியம். இவற்றைச் சேர்ப்பதன் மூலம், இன்சுலின் எதிர்ப்புப் பிரச்சனை குறைந்து, உங்கள் எடை படிப்படியாகக் குறையத் (Weight Loss) தொடங்கும்.
எடை இழப்பு உணவுமுறை (Weight Loss)
உடல் எடையை கட்டுப்படுத்த உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதற்கு நமது தினசரி உணவில் சில மாற்றங்களை செய்யலாம். கோதுமை சப்பாதிக்கு பதிலாக தானிய சப்பாதிகளை உட்கொள்ளலாம். மூன்று வேளையும் சரியான நேரத்தில் சாப்பிடுவது மிக அவசியம். அதிகபட்சமாக சாப்பிடாமல், சரியான அளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதாவது எவ்வளவு பசிக்கிறதோ, அவ்வளவு, அல்லது அதற்கு குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் உணவில் இனிப்புகள் மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும். இவற்றில் அதிக கலோரிகள் இருப்பதால் வயிற்றை முழுமையாக நிரப்பாது. இரவு உறங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நடக்கவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ