Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!
அமிழ்தவள்ளி மூலிகை (Giloy) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த தேர்வு என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நச்சு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் Omicron மாறுபாடு மக்கள் மனதில் பீதியை உருவாக்கியுள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்க்க, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் மக்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் பல முறைகளை முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், நோய் எதிர்ப்பு சக்தி எடுக்கப்படும் அதீத முயற்சி உங்களை சிக்கலில் தள்ளும்.
கிலோய் (Giloy), அதாவது சீந்தில் எனும் அமிழ்தவள்ளி, நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity Booster) அதிகரிக்கும் என்பதில் ஐயாம் ஏதும் இல்லை. ஆயுர்வேதத்தில் கிலோய்க்கு (Giloy) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் இதை அதிக அளவில் உட்கொள்கின்றனர். கிலோய் என்பது ஒரு வகை மூலிகையாகும். கொரோனா காலத்தில் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக இது மிகவும் பிரபலமானது அதேசமயம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நச்சு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
கல்லீரல் பாதிப்பு
கிலோய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் இலைகள் முதல் வேர் வரை அதன் அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீபத்தில், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் உட்பட 13 மருத்துவ மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், கல்லிரல் கிளப் இந்தியா, என்னும் அமைப்பு நீண்ட நாட்களாக கிலோய் சாப்பிட்டு வருபவர்களுக்கு, நாள்பட்ட கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பது கண்டறிந்துள்ளது.
கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரி KGMU கல்லீரல் பிரிவின் இணை பேராசிரியர் டாக்டர் அஜய் குமார் பட்வா இது குறித்து கூறுகையில், '67.4 சதவீத நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சனைகளுக்கு கிலோய் தான் முக்கிய காரணம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய், தைராய்டு, ரத்த அழுத்தம் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை எம்பதோடு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து கல்லீரல் பிரச்சனைக்கு அதிக அளவில் கிலோய் எடுத்துக் கொண்டது தான் முக்கிய காரணம் என கூறலாம்’ என்றார்.
அத்தகைய சூழ்நிலையில், Giloy உட்கொள்ளும் முன் ஒரு நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்ற பொருட்களையும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்து சீரான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR