தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 மற்றும் ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் உலகம் முழுவதும் கவலைக்குரிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளன. இதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றாலும், நாம் எச்சரிக்கையை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏனெனில் இந்த புதிய ஒமிக்ரான் (omicron) மாறுபாட்டின் தொற்று பரவும் வேகம் டெல்டா வகையை விட மிக அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு மட்டுமே உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதற்கு உங்களின் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம். நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் என்றால், அந்த நோயிலிருந்து விரைவில் மீள கீழ்கண்ட உணவுகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.
1. பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்கள்
பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள், அவற்றில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் பி12 நிறைந்துள்ளது. உலர் பழங்களில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது என்பதால் அதையும் கட்டாயம் உணவில் சேருங்கள். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
2. புரதம் நிறைந்த உணவுகள்
உங்களுக்கு கோவிட் தொற்று இருந்தால், வைரஸை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே புரதம் நிறைந்த முட்டை, மீன், டோஃபு மற்றும் பருப்பு வகைகளை உண்ணுங்கள். சில முழு தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. விட்டமின் டி
வைட்டமின் டியை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும், நோயாளி விரைவில் குணமடைவார். 2021 மே மாதத்தில், தெலுங்கானாவில், நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (NIMS) மற்றும் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அங்கு சிகிச்சை பெற்ற கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளுக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது என்பதை இந்த ஆய்வு எடுத்து காட்டுகிறது.
4. மசாலா பொருட்கள்
கோவிட் வைரஸால் வாயின் சுவை மறைந்தால், உணவில் பூண்டு, இஞ்சி, கிராம்பு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் அனைத்து வகையான மசாலாப் பொருட்களையும் பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து சுவை உணர்வும் சீராகும்.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR