Omicron Variant of Corona: கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தீவிரத்தை புரிந்து கொள்ள இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.  எனவே அது குறித்து 5 முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வது, தொற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு அதிகரித்து, கோவிட் -19 நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. ஆனால் கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. 


கொரோனாவின் புதிய வகைக்கு (பி.1.1.529) ஓமிக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேல், போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளிலும், இந்த வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) இது மிகவும் கவலைக்குரிய மாறுபாடு என்று கூறியுள்ளது. ஓமிக்ரான் அச்சத்தில் வாழும் உலக மக்களுக்கு இது தொடர்பான சில முக்கியமான புதிய தகவல்களை ஞாயிற்றுக்கிழமை WHO வழங்கியுள்ளது.


ALSO READ | Omicron மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?


Omicron பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகலவல்கள்: 


1. WHO இன் கூற்றுப்படி, ஏற்கனவே கொரோனா வைரஸின் ஏதேனும் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஓமிக்ரான் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கலாம் என்று ஆரம்ப நிலையிலான சான்றுகள் தெரிவிக்கின்றன. எனவே நீங்கள் இதற்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


2. முந்தைய வகைகளை விட (டெல்டா, ஆல்ஃபா போன்றவை) ஓமிக்ரான் மிகவும் வேகமாக பரவுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. அதாவது, இது மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வேகமாகப் பரவும் என்பதை இப்போதே தெளிவாகச் சொல்ல முடியாது. வேகமாக பரவும் வகையாக இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. எனினும், இந்த தொற்றை RTPCR சோதனை மூலம் கண்டறிய முடியும் என்பது சிறிது நிம்மதி அளிக்கும் விஷயம் ஆகும்.


3. உலக சுகாதார அமைப்பு (WHO), அதன் தொழில்நுட்ப அமைப்புகளுடன் சேர்ந்து, புதிய மாறுபாடான Omicron கொரோனா தொற்றை தடுப்பூசி எந்த அளவிற்கு தடுக்கும், எந்த அளவிற்கு பாதுகாக்கும் என்பதை பற்றி இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


4. Omicron மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் நிலை எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கும் என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஓமிக்ரானின் அறிகுறிகள் கொரோனா வைரஸின் பிற வகைகளிலிருந்து வேறுபட்டதா அல்லது ஒத்ததா என்பதை விளக்கக்கூடிய எந்த தகவலும் தற்போது இல்லை (Omicron Symptoms).


5. ஆரம்ப தரவுகளின்படி, தென்னாப்பிரிக்காவில், தொற்று ஏற்பட்ட  இளைஞர்களுக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. இதனால் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தீவிரத்தை புரிந்து கொள்ள இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.


ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR