Papaya: குளிர்காலத்தில் பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ‘3’ நோய்கள் வரவே வராது!
Benefits Of Papaya Eating In Winter: சூப்பர் உணவு என்றும் அழைக்கப்படும் பப்பாளிப் பழத்தை அனைவரும் உண்ணலாம். அதிலும் குளிர்காலத்தில் பப்பாளி செய்யும் மாயம் அற்புதமானது
பல வித ஊட்டச்சத்துகளை அளிக்கும் பழங்களும் காய்களும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. காயாக இருக்கும்போதும் பழமாக பழுத்த பிறகும் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. முக்கனிகளில் ஒன்றாக இடம் பெறாவிட்டாலும், மா, பலா மற்றும் வாழை ஆகிய முக்கனிகளுக்குப் பிறகு, பழமாக கனிந்த பிறகும், காயாக இருக்கும்போதும் ஆரோக்கியத்தை கூட்டும் பண்பைக் கொண்டது பப்பாளி. வாழையைப் போலவே, பப்பாளியின் இலைகள் மட்டுமல்ல, பப்பாளி விதைகளும் மருத்துவப் பண்புகளைக் கொண்டது.
பப்பாளி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தினசரி சாப்பிட உகந்த இந்தப் பழத்தை அனைவரும் உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பப்பாளியில், ஃபோலேட், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உட்கொள்வதால் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் குறைவதோடு, எலும்புகளும் வலுவடையும். அனைத்துப் பருவத்திலும் பப்பாளி சுலபமாக கிடைக்கிறது.
குளிர்காலம் அல்லது கோடை காலம் என எதுவாக இருந்தாலும், பப்பாளி ஒவ்வொரு சீசனிலும் சந்தையில் கிடைக்கும். குளிர் காலத்தில் பப்பாளியின் விலை குறைவாகவே இருக்கும். இந்த சீசனில் பப்பாளியை அதிகம் சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | இறைச்சி, மீனை விட அதிக ஆற்றலை கொடுக்கும் டாப் ‘5’ சைவ உணவுகள்!
பப்பாளி குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அதன் தன்மை வெப்பமமானது என்பதால், குளிர்காலத்தில் பப்பாளி நமது உடலுக்கு பல வழிகளில் நன்மை செய்கிறது. சூப்பர் உணவு என்றும் அழைக்கப்படும் பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் தாதுக்களும் இருப்பதால், பப்பாளியை அனைவரும் உண்ணலாம்.
பப்பாளியின் தன்மை
இதன் தன்மை உஷ்ணத்தைக் கொடுப்பதால் கோடையில் உண்பதைவிட, குளிர்காலத்தில் அதிகமாக உண்ணப்படுகிறது. குளிர்காலத்தில் பப்பாளியை உட்கொள்வதால் உடல் சூடாக இருக்கும்.
கல்லீரலுக்கு பப்பாளி
இது மட்டுமின்றி, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றிற்கு பப்பாளி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் பெரிதும் உதவுகிறது. குளிர்ந்த காலநிலையில் பப்பாளியை உண்பது மிகவும் நல்லது.
வயிற்று பிரச்சனைகளுக்கு பப்பாளி
பப்பாளி வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அஜீரணம், நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ், வயிற்றுப் புண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மிகுதியாக உள்ள பப்பாளி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பப்பாளியில் உள்ள புரதம் உடலில் ஒரு சூப்பர் நொதியாக செயல்படும். பப்பைன் என்ற சிறப்புப் பொருள் பப்பாளியின் மிகவும் சிறந்த அம்சமாகும்.
மேலும் படிக்க | Vitamins: ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வைட்டமின்கள்! இவற்றுக்கு மாற்று இருக்கா?
உடல் எடையக் குறைக்கும் பப்பாளி
செரிமானத்திற்கு உதவி செய்வதால், உடல் எடையை குறைக்கவும் பப்பாளி உதவுகிறது. உடல் பருமனை தடுக்கும் பண்புகள் பப்பாளியில் உள்ளன. இது தொப்பையை குறைத்து (Belly Fat) எடையை குறைக்க உதவுகிறது. குறைந்த கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கவும், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும் பப்பாளி உதவுகிறது.
எலும்புகளுக்கு பப்பாளி
பப்பாளி எலும்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முடக்கு வாதம் மற்றும் கீல்வாதம் சிகிச்சையிலும் இது மிகவும் உதவியாக இருக்கும். இதில் காணப்படும் சைமோபாபன் என அழைக்கப்படும் என்சைம்கள், எலும்புகளை வலுப்படுத்துகிறது.
பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அது மட்டுமல்ல, பப்பாளியை காயாக சமைத்தும் உண்ணலாம். அதேபோல, அதன் இலைகளை சாறாக எடுத்து குடிப்பது பல நோய்களை குறைக்கவும், போக்கவும் உதவுகிறது. .
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வேகமா எடை குறைய.. காலையா, மாலையா? எப்போது நடைப்பயிற்சி செய்வது சிறந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ