Vitamins For Health: ஆரோக்கியம் முழுமையானதாக இருக்க உடல் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அவசியமானது. அதற்கு நமது உடலுக்கு முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தேவை.
பல முக்கிய வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானவை என்றாலும், அவற்றில் மிகவும் அவசியமான 5 வைட்டமின்கள் குறைந்தால்ல் ஆரோக்கியம் சீர்கெடும். அந்த ஐந்து வைட்டமின்ன்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மாறிப்போன உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் காரணமாக, நம்து உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்கு ஒருபோதும் மாற்று கிடையாது.
ஆரோக்கியமான உணவுக்கு மாற்று இல்லை என்றாலும், இயல்பான வாழ்க்கை முறையை வாழ்வதற்காக சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படுகிறது. உடலில் பிரச்சனை ஏற்படும்போது, மருத்துவர்களே, சப்ளிமெண்ட்களை பரிந்துரைக்கின்றனர். உங்கள் உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
பழங்களில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் மிகவும் சிறந்தவை, அவை சமைக்காமல் அப்படியே உண்ணப்படுவதால் அல்லது சாறாக மாற்றி பருகப்படுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வீணாகமல் சென்று சேர்கின்றன
வைட்டமின் ஏ: வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் ஏ சத்து, இதயம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இந்த வைட்டமின், மாலைக்கண் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் பார்வைத்திறனை மேம்படுத்துவதற்கும் அவசியமானது. ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கிறது, ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது மற்றும் எலும்பு வலிமைக்கு பங்களிக்கிறது. வைட்டமின் ஏ குழந்தையின் வளர்ச்சி மற்றும் கருவுறாமைக்கு உதவுகிறது. இனப்பெருக்கத்தில் முக்கியமானது. இந்த வைட்டமின் ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
வைட்டமின் சி: ஆரோக்கியமான தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகளில் உள்ள கொலாஜன், ஆரோக்கியமான தோல் மற்றும் குருத்தெலும்புகளை பராமரிக்கிறது. இந்த முக்கியமான வைட்டமின், குறிப்பிட்ட இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது. திராட்சைப்பழங்கள், சிட்ரஸ் பழங்கள், கிவி, மிளகுத்தூள், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பாகற்காய் ஆகியவற்றில் தரமான வைட்டமின் சி நிறைந்துள்ளது
வைட்டமின் பி 12: இந்த வைட்டமின் நரம்பு மற்றும் மூளை செயல்பாடு, வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றிற்கு முக்கியமானது மற்றும் நரம்பியக்கடத்திகளை ஒருங்கிணைக்க அவசியம். மனநிலையை மேம்படுத்தும் வைட்டமின் பி12, வயதாகும் செயல்முறையை தாமதமாக்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் மனதை உற்சாகமாக வைக்கவும் உதவுகிறது. இரத்த சிவப்பணு உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் நரம்பு சேதம், பிறவிக் கோளாறுகள் மற்றும் இரத்த சோகை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. பருப்பு வகைகள், முழு தானியங்கள், வாழைப்பழங்கள், மிளகு பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாக உள்ளது
வைட்டமின் பி9: ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏ தொகுப்பு, மூளை செயல்பாடு மற்றும் விரைவான செல் பிரிவுக்கு வைட்டமின் பி9 அவசியம். திசு மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின் பி9 மிகவும் முக்கியமானது, குறிப்பாக பிறந்த குழந்தை, பச்சிளம் குழந்தைகள், வளர் இளம் பருவம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் பி9 அவசியம் ஆகும். இலை காய்கறிகள், கீரைகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், பீட்ரூட் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது
வைட்டமின் டி: மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் டி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான இந்த வைட்டமின், நோய்த்தொற்றுகளைக் குறைக்கிறது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் டி, போதுமான அளவு இருந்தால், தசை மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தி எலும்பு முறிவுகள் ஏற்படுவதைக் குறைக்கின்றன. வைட்டமின் டி தூக்கத்தின் தரம் மற்றும் மனநிலையை மேம்படுத்துவதற்கு காரணமாகும். இதய நோய், குறிப்பிட்ட புற்றுநோய்கள் மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றின் வாய்ப்பையும் குறைக்கும் வைட்டமின் டி, சூரிய ஒளியில் அதிக அளவு உள்ளது. தினசரி வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிடுவது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது. காளான்களில் வைட்டமின் டி அபரிதமாக உள்ளது.