நரை முடிக்கான வீட்டு வைத்தியம்: தற்போது பல இளைஞர்கள் நரை முடி பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், முன்பு இது வயதான பிறகு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு முடி நரைக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால், இளைஞர்கள் குறைந்த தன்னம்பிக்கையையும், வெளியுலகில் சங்கடத்தையும் சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் நரை முடியை மறைக்க பலர் கெமிக்கல் கலரைப் பயன்படுத்துகின்றனர், இவை முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் ஹேர் டையை தவிர்க்க பெண்களும், ஆண்களும் தங்களின் தலையை மூடிக் கொள்கிறார்கள், ஆனால் இப்போது டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை, சில வீட்டு வைத்தியங்கள் மூலம் முடியை மீண்டும் கருமையாக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறு வயதிலேயே நரை முடி ஏற்பட என்ன காரணம்?
வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன. மோசமான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. வெள்ளை முடிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை வெள்ளை முடிக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, உங்கள் தலைமுடி நரையாக மாறியிருந்தால், இந்த டிப்ஸ் கட்டாயன் உங்களுக்கு பலன் தரும்.


மேலும் படிக்க | Heart Attack: இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகமாக வருவதற்கான காரணங்கள் இவை தான்...


நரை முடியை எப்படி கருமையாக்குவது


1. பிளாக் டீ (Black Tea)
பிளாக் டீயை புத்துணர்ச்சி பெற பயன்படுத்துகிறோம், ஆனால் அது நரை முடியை கருமையாக்கவும் உதவுகிறது. இதற்கு பிளாக் டீ இலைகளை முதலில் கொதிக்க வைத்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இல்லையெனில் தேயிலை இலைகளை அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயார் செய்யலாம். இப்போது இந்த கலவையை தலைமுடியில் தடவி காயந்தப் பின் தண்ணீரில் நன்கு அலசவும். சில நாட்களில் வித்தியாசம் தெளிவாகத் தெரியும்.


2. கறிவேப்பிலை (Curry Leaves)
உணவின் சுவையை அதிகரிக்க கறிவேப்பிலையை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் இவை கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் இதற்கு நீங்கள் முதலில் மிக்ஸியில் கறிவேப்பிலை, நெல்லிக்காய் பொடி, நீர்ப்பிரமி தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் தயாரானதும், தலைமுடியில் 30 நிமிடங்கள் தடவி உலர வைக்கவும். நன்கு காய்ந்தப் பிறகு இறுதியாக, முடியை சுத்தமான தண்ணீரால் கழுவவும்.


3. நெல்லிக்காய் பொடி (Amla Powder)
நெல்லிக்காய் முடிக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது, அதனால்தான் இது பல முடி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முடியை ஆயுர்வேத முறையில் கருப்பாக்கலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் பொடியை போட்டு அது கருப்பாகும் வரை கலக்கவும். இப்போது அதில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி கேஸை சிம்மில் வைத்து சூடாக்கி, பின்னர் குளிர வைக்கவும். மறுநாள் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து, உங்கள் உச்சந்தலையில் தொடர்ந்து மசாஜ் செய்யவும். இது உங்களின் வெள்ளை நிற கூந்தலை கருப்பாக்க உதவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காய்கறிகளைக் கொண்டே உடல் எடையைக் குறைக்க முடியும் தெரியுமா? அது இந்த காய் தான்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ