Tips For Healthy Heart: ஊட்டச்சத்துக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கூடுதல் சர்க்கரைகள் உள்ள உணவுகள் இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
உணவில் பச்சை இலைகள் மற்றும் பல்வேறு நிறமுள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
காய்கறிகளிலும் சிலவற்றை விலக்க வேண்டியிருக்கும். மருத்துவர்களின் பரிந்துரையை பின்பற்றவும்
சைக்கிள் ஓட்டுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்
இதயத்தை பாதுக்காப்பதற்கு முக்கிய வழி ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் உணவுமுறை
ஆரோக்கியமான உணவுகளை உண்பதும், கொழுப்புகளை குறைத்து உண்பதும் அவசியம்
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்