அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுபவர்களுக்கு, கோடை காலம் ஒரு சிறந்த பருவமாகும். இந்த பருவத்தில் உங்கள் எடையை எளிதாக குறைக்கலாம். கோடையில் உடல் எடையைக் குறைக்க உதவும் சில காய்கறிகள் உண்டு, அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை இழப்பு பயணத்தில் வெற்றி பெறலாம்…
மாறிவரும் வாழ்க்கை முறையால், மக்களின் உணவுப் பழக்கம் பெருமளவு மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் வேகமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும், எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
கூடிய எடையைக் குறைக்க, என்ன செய்வது என்று புரியாமல் மக்கள் தவிக்கின்றனர். ஆனால் என்ன செய்தாலும் உடல் எடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்று கவலைப்படுத்துகிறதா?
உணவில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் அதிகரித்து வரும் எடையை கட்டுப்படுத்தலாம். சுகாதார நிபுணர்களின் அறிவுரைப்படி, கோடை காலம் உடல் எடையை குறைக்க சிறந்தது. எடையை குறைக்க உதவும் சில காய்கறிகளின் உதவியால் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க | உடல் எடையை பக்காவாக குறைக்க பழங்கள், காய்கறிகள் போதுமா... உண்மை இதோ!
சுரைக்காய்
கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சுரைக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நாட்களில் நிறைய பாகற்காய் சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
சுரைக்காயை சமைத்தும் சாப்பிடலாம், அதை சாறு எடுத்து ஜூஸாகவும் எடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் முக்கியமான ஒன்று சுரைக்காய். அதனால்தான் நார்ச்சத்து நிறைந்த சுரைக்காய், எளிதில் எடையைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
வெள்ளரி
கோடையில், நீங்கள் சந்தையில் நிறைய வெள்ளரிகளைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தி வைத்திருக்கும்.
வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்தது. இதை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பூஜ்ஜிய கலோரிகள் உள்ளன. எடையைக் குறைக்க வெள்ளரியும் ஒரு நல்ல வழி.
மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்
பாகற்காய்
பலருக்கு பாகற்காய் சாப்பிட பிடிக்காது. ஆனால் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாகற்காய் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல், பாகற்காயை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. பாகற்காய் சுவையில் கசப்பானது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
வெண்டைக்காய்
பெரும்பாலான குழந்தைகளுக்கு வெண்டைககய் என்றால் மிகவும் பிடிக்கும். இதில், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இந்த இரண்டிலும் நல்லது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சமைக்கவும் சுலபமான காய் வெண்டைக்காய்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ