சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேப்பை அல்லது கேழ்வரகு, தேவ உணவாக கருதப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் King of Millets என்று கூறுவார்கள். கேழ்வரகில் இருக்கும் மிதியோனை என்னும் அமினோ அமிலம் முதுமையை தடுக்கிறது. இது லெசித்தினுடன் இணைந்து, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதில் அமினோ அமிலங்கள், நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது, இது எடை அதிகரிக்க ஒரு போதும் அனுமதிக்காது. அது மட்டும் இன்றி, உடலை ரிலாக்ஸ் செய்து, டென்ஷன் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்ற தீர்வாக அமைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், ராகி ரொட்டி, ராகி தோசை, ராகி இட்லி போன்றவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவது சிறந்த பலனைக் கொடுக்கும். எடை இழப்புக்கு ராகி எந்த வகையில் பலன் அளிக்கிறது மற்றும் அதை சாப்பிடுவதற்கான சரியான வழி என்ன என்பதை அறிந்து கொள்வோம்.


எடை இழப்புக்கு உதவும் நார் சத்து


ராகி நார்ச்சத்து நிறைந்த தானியமாகும். நார்ச்சத்து உட்கொள்வதால் வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும். இதன் காரணமாக, உங்களுக்கு விரைவாக பசி ஏற்படாது. இதனால் கன்னாபின்னாவென்று எதையும் சாப்பிடுவதும் தவிர்க்கப்படும்.


கேழ்வரகில் உள்ள புரோட்டீன் எடையைக் குறைக்கும்


ராகி புரதம் நிறைந்தது. புரதம் தசையை உருவாக்குகிறது. ராகியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்பு எரிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் வலுவான தசைகள் அதிக கொழுப்பை எரிக்க உதவுகின்றன. இருப்பினும், உடல் எடையை குறைக்க விரும்புவோர், தாங்கள் உட்கொள்ள வேண்டிய ராகியின் அளவை உணவு நிபுணரிடம் ஆலோசிக்கவும்.


ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்


ராகியை எந்த வடிவில் சாப்பிட்டாலும், உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். இது விரைவாக பசியை ஏற்படுத்தாது. எடை அதிகரிப்பு பிரச்சனையை நீங்கள் தவிர்க்கலாம்


எடை இழப்புக்கு ராகியை எப்படி சாப்பிடுவது


உடல் எடையை குறைக்க வேண்டுமானால், காலையில் ராகியை சாப்பிட வேண்டும். ராகி கஞ்சி, ராகி இட்லி, ராகி தோசை போன்றவற்றை காலை உணவில் உட்கொள்வது ஆரோக்கியமாக இருப்பதுடன் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ராகி ரொட்டியை இரவில் சாப்பிட வேண்டும். மாலையில் பசி எடுத்தால், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, ராகியினால் செய்யப்பட்ட இனிப்பு உருண்டைகள் அல்லது தின்பண்டங்கள் போன்றவற்றை உட்கொள்வது எடையைக் குறைக்கும்.


மேலும் படிக்க | எடை இழப்பிற்கு எது சிறந்தது... பாதாம் பருப்பா... அல்லது ஊற வைத்த பாதாமா!


ராகி/ கேழ்வரகின் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள்


1. கேழ்வரகு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.


2. ரத்த சோகை உள்ளவர்களுக்கு ராகி ஆரோக்கியமானது. 


3. ராகி எலும்புகளை வலுவாக்கும்.


4. சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம் எனலாம். 


5. உடல் எடையை குறைக்க, ராகியை சாப்பிடுங்கள்.


6. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும் ராகி உதவும். கேழ்வரகில் உள்ள நாசத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கின்றன. 


7. செரிமான சக்தியை அதிகரித்து, வயிற்றின் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.


8. பருக்கள், கருவளையங்கள், முகச்சுருக்கள், சரும சுருக்கங்கள் போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் ராகியை சாப்பிட வேண்டும். 


9. சருமத்தை பளபளப்பாக மாற்றும். இதில் லைசின் என்ற உறுப்பு உள்ளது, இது சருமத்தை இறுக்கமாக்குகிறது.


கேழ்வரகில் உள்ள சத்துக்கள்


கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. சைவ உணவில் அதிகப்படியான கால்சியம் இதில் தான் உள்ளது. பாலை விட மூன்று மடங்கு கால்சியம் கொண்டது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என் அனைத்தும் சரிவிகிதத்தில் உள்ளன. குழந்தைகளுக்கு கேழ்வரகை போல் சத்தான சுவையான ஊட்டச்சத்து வேறு எதிலும் கிடைக்காது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடி உடல் எடையை வேகமாக குறைப்பது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ