அனைவருக்கும் பிடித்தமான பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள பழம் பப்பாளி. பப்பாளியை பழமாக மட்டுமல்ல, காயாகவும் பயன்படுத்தி அதிக நன்மைகளைப் பெறலாம். பழுத்த பப்பாளியில் வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் நிரம்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பச்சை பப்பாளியில், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி ஆகிய சத்துக்களின் வளமான ஆதாரம் உள்ளது. பப்பாளிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதிலிருந்து எட்டு டிட் பிட்ஸ் மட்டும் உங்களுக்காக:  


உடல் எடையை குறைக்க உதவுகிறது


பழுத்த பப்பாளியைவிட பச்சை பப்பாளியில் அதிக செயலில் உள்ள நொதிகள் உள்ளன. இதில் சக்திவாய்ந்த என்சைம்களான பாப்பைன் மற்றும் சைமோபாபைன் ஆகியவை உள்ளன.  இந்த இரண்டு என்சைம்களும் நாம் உண்ணும் உணவில் இருந்து கொழுப்பு, புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவுகின்றன.


உண்மையில், பெப்சினைக் காட்டிலும், கொழுப்பை உடைப்பதில் பாப்பேன் மிகவும் திறமையானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க இந்த பச்சை பப்பாளியுடன் மிளகு சேர்த்து அருமையான பலனைப் பெறலாம். 


மேலும் படிக்க | பப்பாளி பழத்தால் பயனா, பாதகமா? எது அதிகம்? 


நீரிழிவு நோயை வெல்ல உதவும் பப்பாளிக்காய்


நீரிழிவு நோயாளிகள் பச்சை பப்பாளியை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். International Journal of Molecular Sciences என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பச்சை பப்பாளி சாறு பீட்டா செல்களை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் தொகுப்பை அதிகரிக்கிறது என்று தெரிகிறது.


செரிமானத்தை மேம்படுத்துகிறது


மற்ற நொதிகள் மற்றும் பைட்டோநியூட்ரியன்களுடன் பப்பேன் மற்றும் சைமோபபைன் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த சக்திவாய்ந்த கலவை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.



மலச்சிக்கலை போக்க உதவுகிறது


நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளி மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள என்சைம்கள், குறிப்பாக அதில் உள்ள லேடெக்ஸ் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.


கோடெக்ஸ் வயிற்றுக்குள் பெரிஸ்டால்சிஸை மேம்படுத்த உதவுவதோடு, கழிவுகளை நகர்த்த உதவுகிறது. பச்சை பப்பாளியில் உள்ள அபரிதமான நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகும்.   


மேலும் படிக்க | Mens Health: திருமணமான ஆண்களின் நண்பன் இந்த மாதுளை 


காயங்களை விரைவில் குணப்படுத்துகிறது


பச்சை பப்பாளியில் புரோடீஸ் என்சைம் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், காயத்தை வேகமாக ஆறவைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பச்சை பப்பாளியில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


இது சில தோல் பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தைத் தணிக்கிறது.


வைட்டமின் குறைபாட்டை தடுக்கிறது


தி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தக்காளி மற்றும் கேரட்டை விட பச்சைப் பப்பாளியில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 


பப்பாளிக்காயில் உள்ள கரோட்டினாய்டுகள் மற்ற பழங்களில் உள்ளதை ஒப்பிடும்போது, மனித உடலுக்கு அதிக இணக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டது.


மேலும் படிக்க | உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும் துளசி டீ


தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பு


பப்பாளிக் காயில் உள்ள ஒரு சிறந்த பண்பு, தாய்ப்பால் சுரப்பதற்கு காரணமாக இருக்கிறது. அதனால்தான், ஆயுர்வேதம் போன்ற பல பாரம்பரிய மாற்று மருத்துவத் துறைகளில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பப்பாளிக்காய் பரிந்துரைக்கப்படுகிறது.  


மாதவிடாய் வலியை குறைக்கும் பப்பாளிக்காய்


பப்பாளி கருக்கலைப்பைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த கனியாக நம்பப்படுகிறது. ஆனால் இது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.


ஆனால், பப்பாளிக்காய் சாப்பிடுவது ஒரு பெண்ணின் உடலில் ஆக்ஸிடாஸின் மற்றும் புரோஸ்டாக்லாண்டின் அளவை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பப்பாளிக்காய், பெண்ணின் கருப்பையை விரைவில் சுருங்கச் செய்கிறது. இதனால் மாதவிடாய் வலி குறைகிறது. 


மேலும் படிக்க | ஆரஞ்சு ஜூஸ் பிடிக்குமா, ஜாக்கிரதை: இதனால் உடல் கொழுப்பு அதிகரிக்கலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR