சுரைக்காய் சூப்பின் நன்மைகள்: சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நீர் உள்ளது. சுரைக்காயில் புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. அதனால்தான் சுரைக்காய் உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். சுரைக்காய் சாறு, காய்கறி, சூப் போன்ற வடிவங்களில் சாப்பிடலாம். சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம், போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறலாம். இதன் காரணமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். அதோடு உடல் எடையை குறைத்து மன அழுத்தத்தை போக்கும் திறன் சூப்பில் உள்ளது. சூப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே கூறுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் ப்ரஷர் குக்கரில் நீர் ஊற்றி சுரைக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி போட்டு நன்றாக வேக வைக்கவும். பிறகு அவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து மென்மையான க்ரீம் போல ஆக்கிக் கொள்ளவும். அதன் மீது  சிறிது நெய்யில் தாளித்த சீரகம் சேர்க்கவும். உங்களுக்கு வெண்ணெய் பிடிக்கும் எனில் அதில் கொஞ்சம் வெண்ணெய் சேர்க்கலாம். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக அதில் உப்பு மற்றும் மிளகு தூளைச் சேர்க்கவும். இப்போது உடல் எடையைக் குறைக்கும் மேஜிக் பானமான சுரைக்காய் சூப் தயார்.


மேலும் படிக்க | நாள் முழுவதும் கணினியில் வேலையா... கண்களை பாதுகாக்கும் ‘சில’ உணவுகள்!


சுரைகாய்  சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்”


உடலில் நீர்சத்து குறையாமல் இருக்கும்



சுரைக்காய் சூப் குடிப்பதால், நாள் முழுவதும் நீர்ச்சத்துடன் இருக்கும்.எனவே உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க விரும்பினால், சுரைக்காய் சூப் குடிக்கலாம். அதே நேரத்தில், சுரைக்காய் சூப் குடிப்பதும் உங்கள் சரும பொலிவை மேம்படுத்துகிறது.


எடை குறையும்


சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.எனவே உடல் எடை அதிகமாக இருந்தால் சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். ஏனென்றால், சுரைக்காய் சூப் குடித்தால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதன் மூலம், அதிகப்படியான உணவைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்கலாம்.


மன அழுத்தம் குறையும்


சுண்டைக்காய் சூப் சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்துக்களும் நிறைந்துள்ளன. சுரைக்காயில் கோலின் உள்ளது. கோலின் என்பது மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு வகை நரம்பியக்கடத்தி ஆகும். எனவே, தினமும் சுரைக்காய் சூப் குடித்து வந்தால், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது.)


மேலும் படிக்க | சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ