புதுடெல்லி: கோடைகாலத்தில் வெயிலின் தாக்கமும், அனலின் வெப்பமும் உடல்சூட்டை கிளப்பி விடுகின்றன. சூட்டைத் தணிக்க உணவும், பானங்களும் உதவுகின்றன. நீர்ச்சத்து அதிகம் தேவை என்பதால் அதிக அளவிலான பானங்களை குடிப்பதே அனைவருக்கும் பிடித்தமான விஷயம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பானங்கள் உடல் சூட்டை தணிப்பதோடு, தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கின்றன. ஒருவர், தனது உடல் எடையின் அளவைப் பொறுத்தும் எந்த பானத்தை குடிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். 


கோடைகால பானங்கள்
இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப், பீகார் போன்ற மாநிலங்கள் தாங்க முடியாத வெப்பத்தின் பிடியில் உள்ளன. 


இந்தியாவின் பல இடங்களில் 49 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் நிலவுகிறது. அதிக வெப்பத்தாலும், வெப்ப அலையாலும், நீரிழப்பு, சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் என பல்வேறு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.


மேலும் படிக்க | எடை குறைக்க உங்களுக்கு உதவும் மாமருந்து ‘புதினா’


எலுமிச்சை ஜூஸ்
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை பழச்சாறு, இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சிறப்பு வாய்ந்தது. இதயத்திற்கும் நல்லது, உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுப்பது.


இதுபோன்ற சுலபமாக வீட்டில் தயாரிக்கக்கூடிய பானங்களே கோடையை குளுமையாக்க உகந்தவை.


இந்த நிலைமைகளைத் தவிர்க்க, நம் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டும். கொளுத்தும் கோடை வெப்பத்தை வெல்ல உதவும் சூப்பர் சர்பத்துகள் இவை. 



செம்பருத்தி சர்பத்
தயாரிப்பதற்கு எளிமையானது, சூப்பர் புத்துணர்ச்சி கொடுப்பது செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் பானம். இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.


10 செம்பருத்தி பூக்களின் இதழ்களை எடுத்துக் கொண்டு, அதை மிக்சியில் அடித்து சாறு எடுத்துக் கொண்டு, தேவையான அளவு சர்க்கரையை சேர்க்கவும்.


அதனுடன், ஏலக்காய் பொடியையும் சிறிதளவு எலுமிச்சை சாறும் கலக்கவும். அதில் சப்சா விதையை கலந்தால், செம்பருத்தி சர்பத் ரெடி. ஆரோக்கியமான, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த சர்பத், தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும். 



பானகம்


கோடைக் காலத்தில் கடவுள்களுக்கு படைக்கும் பானகம் என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பானகத்தின் வாசனை மற்றும் சுவை மற்றும் கோடையில் உடல் சூட்டைத் தணிக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைக்கும் பானகம், செரிமானத்திற்கும் உதவுகிறது.


 
நெல்லிக்காய் ஜூஸ்
வைட்டமின் சி அதிகம் கொண்ட நெல்லிக்காயை சர்பத்தாக செய்து குடிக்கலாம். நெல்லிக்காயுடன், கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழையை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.


இதை அப்படியே குடிக்கலாம். வாதம், கபம், பித்தம் என அனைத்து தோஷங்களையும் போக்கும் சர்பத் இது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளையால் ஆபத்தா? ஆதாயமா?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR