மாதுளை ருசியாக இருப்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் நீரிழிவு நோயாளிகள் மாதுளை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். மாதுளை இனிப்பான பழமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
மாதுளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? இது பல நீரிழிவு நோயாளிகளின் கேள்வியாக உள்ளது. மாதுளையை குறைந்த அளவில் உட்கொண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்பதே பதில். மாதுளையை குறைந்த அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்றும் பல நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாக இரத்த சர்க்கரை அதிகரிக்காது
மாதுளம்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இதை சாப்பிட்டால், உங்களுக்கு பசி குறைவாக இருக்கும், அதனால், நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். மாதுளையில் குறைந்த ஜிஐ இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காது.
மேலும் படிக்க | தூங்கும் முன் மறந்து கூட இந்த 3 பொருட்களை சாப்பிடாதீர்கள்
சர்க்கரை நோயாளிகள் மாதுளை சாப்பிடலாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
- உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகளான சோர்வு, தசை வலி போன்றவற்றைக் குறைக்க மாதுளை உதவுகிறது.
- மாதுளை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
- மாதுளையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கும். கூடுதலாக, இதில் நார்ச்சத்து மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளன. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
மாதுளையின் பிற பயன்கள் இதோ:
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
- மாதுளை சாப்பிடுவதால் வயிற்றின் ஜீரண சக்தி பலப்படும்.
- மாதுளை உடல் தசைகளை வலிமைக்கும்.
- இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
- உடல் பருமனில் இருந்து விடுபட உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Bipolar Disorder காரணம், அறிகுறிகள், தீர்வு: முழு விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR