கீழ் முதுகு வலி ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது
நாம் அன்றாடம் பின்பற்றக்கூடிய சில உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பழக்க வழக்கங்கள் முதுகு வலியை ஏற்படுத்துகின்றன என்பதை அறியாமலேயே அவற்றை நாம் செய்து வருகிறோம். அதில் இருந்து விடுபட செய்ய வேண்டியது இதுதான்
கீழ் முதுகு வலி என்பது பெரும்பாலான நபர்கள் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு உடல் ரீதியான பிரச்சனையாக உள்ளது. 45 வயதிற்கும் குறைவான நபர்கள் போதுமான உடல் செயல்பாட்டை கொண்டு இருக்காத காரணத்தால் இது ஏற்படுகிறது. பத்தில் எட்டு நபர்கள் தங்களது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியை அனுபவிப்பதாக கூறுகின்றனர். வயதாகும் பொழுது உடல் ரீதியாக ஃபிட்டாக இல்லாத நபர்களிடையே இது பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. நாம் அன்றாடம் பின்பற்றக்கூடிய சில உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பழக்க வழக்கங்கள் முதுகு வலியை ஏற்படுத்துகின்றன என்பதை அறியாமலேயே அவற்றை நாம் செய்து வருகிறோம். அதில் இருந்து விடுபட கடைபிடிக்க வேண்டிய வழிமுறை
கீழ் முதுகு வலி ஏற்படுவதற்கான சில காரணங்கள்:
- உடல்பருமன் அல்லது விரைவான முறையில் உடல் எடை அதிகரிப்பதால் கீழ் முதுகு வலி ஏற்படலாம். பலு தூக்குதல், தள்ளுதல் அல்லது இழுத்தல் போன்ற வேலைகளை அன்றாடம் செய்யக்கூடிய நபர்களுக்கும் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் படிக்க | அடிக்கடி ஏற்படும் பசியை நிறுத்த உதவும் 8 ஆயுர்வேத உணவுகள்
- கூடுதலாக முதுகிற்கு சரியான ஆதரவு இல்லாமல் நாற்காலியில் மோசமான தோரணையுடன் அமர்ந்திருப்பதாலும் முதுகு வலி ஏற்படலாம். மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற நம் மனதை பாதிக்க கூடிய விஷயங்கள் காரணமாகவும் நமது தசைகளில் டென்ஷன் மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.
புகைப்பிடிப்பதால் முதுகு தண்டுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் குறைந்து முதுகு வலி உண்டாகிறது.
- இன்ஃப்ளமேட்டரி ஆர்த்ரைட்டிஸ் போன்ற வீக்கம் காரணமாக ஏற்படக்கூடிய சில நோய்களின் விளைவாக இன்ஃப்ளமேட்டரி பேக் பெயின் என்ற நாள்பட்ட முதுகு வலி ஏற்படுகிறது.
- இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் கம்பியூட்டர் ஸ்கிரீன் முன்பு அமர்ந்திருப்பது அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக ஏராளமான உடல் நலக் கோளாறுகள் உண்டாகிறது. இது தசை, எலும்பு மற்றும் உடலின் தோரணைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால், BP, இதயம் சார்ந்த நோய்கள் போன்ற அபாயகரமான நோய்களையும் உண்டாக்குகிறது.
முதுகு தண்டை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ்:
- பணியிடத்திலும், அன்றாட வேலைகளை செய்யும் சமயத்திலும் நல்ல தோரணையை பராமரிப்பது முக்கியம்.
- அதிகப்படியாக தட்டையாக இருப்பது அல்லது வளைந்து இருக்கும் முதுகு தண்டு மூட்டுகள் மற்றும் டிஸ்க்குகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே முதுகு வலியினால் அவதிப்படும் நபர்கள் அன்றாடம் மிதமான உடற்பயிற்சியை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- வயதானவர்கள் பொறுமையாக உடற்பயிற்சி செய்ய ஆலோசிக்கப்படுகிறார்கள். தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
- உணவு கட்டுப்பாடு மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவை முதுகு வலியை சமாளிப்பதற்கு அவசியம்.
- புகைப்பிடிப்பதை தவிர்த்தல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்த கூடிய உணவுகளில் இருந்து விலகி இருத்தல்.
- தினமும் உடற்பயிற்சி செய்து உங்கள் முதுகு பகுதியை நீட்சி பெற செய்வது மற்றும் யோகா செய்வது கீழ் முதுகு வலியை குறைக்க உதவும்
மேலும் படிக்க | த்ரிஷா மாதிரி என்றும் 16 வயதாக இருக்கணுமா... உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ