த்ரிஷா மாதிரி என்றும் 16 வயதாக இருக்கணுமா... உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை!

வயது ஏற ஏற நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். சருமத்தில் சுருக்கம், தொய்வு ஆகியவை தோன்றும். ஆனால் உங்கள் உணவில், முதுமையை எதிர்க்கும் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம்,  நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும்,  இருக்க முடியும். 

வயது ஏற ஏற நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். சருமத்தில் சுருக்கம், தொய்வு ஆகியவை தோன்றும். ஆனால் உங்கள் உணவில், முதுமையை எதிர்க்கும் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம்,  நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும்,  இருக்க முடியும். 

1 /8

முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது.... ஆனால் நிச்சயம் ஒத்திப் போட முடியும். அதற்கு, விட்டமின் ஈ மற்றும் கொலாஜம் நிறைந்த முதுமை எதிர்ப்பு உணவுகளை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

2 /8

பாதாம் மற்றும் வாதுமை பருப்புகள் வைட்டமின் ஈ சத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். மேலும், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சரும திசுக்களை புதுப்பிப்பதோடு, புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இவற்றை உட்கொள்வதால் சருமம் பொலிவடையும்.

3 /8

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் டுனாவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியமான சருமத்திற்கு நன்மை பயக்கும். இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்திற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.

4 /8

கிவி பழம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவை உடலின் என்சைம் திசு மற்றும் செல் சவ்வுகள் அதிகரிக்க உதவுகின்றன. கூடுதலாக, உடலில் ஆன்டிபாடிகள் மற்றும் இரத்த அணுக்களை அதிகரிக்கிறது. 

5 /8

டார்க் சாக்லேட் முதுமையை எதிர்கும் தன்மை கொண்டது. இதில்  உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். ஆனால் டார்க் சாக்லேட்டை அதிகம் சாப்பிட வேண்டாம்.

6 /8

கிரீன் டீ யில்  வைட்டமின் ஏ, ஈ, பி5, கே, புரதம், இரும்பு, தாமிரம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு மூன்று கப் கிரீன் டீ அருந்துவது செல்கள் சேதத்தை  தடுக்கிறது. எனவே நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம்.

7 /8

ஆலிவ் எண்ணெயில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள்  முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் அவை மூளை ஊக்கியாகவும் செயல்படுகின்றன. 

8 /8

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது