உலகம் நீண்ட காலமாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்காகக் காத்திருக்கிறது. அந்த காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா ஆகஸ்ட் 12 அன்று பதிவு செய்ய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமலேயா மையம் உருவாக்கிய தடுப்பு மருந்து, ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படும்.  கடைசி கட்ட சோதனைகள் மிகவும் முக்கியமானவை என்றும்  தடுப்பூசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சர்  தெரிவித்தார். மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் கிரிட்நேவ் தெரிவித்தார்


ALSO READ | சானிடைசர் vs சோப்பு நீர்: எது சிறந்தது?


முந்தைய அறிக்கையில், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனையில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜூன் 18 அன்று தொடங்கியது. 38 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. முதல் குழு மீதான பரிசோதனை ஜூலை 15 ம் தேதியும், இரண்டாவது குழு மீதான பரிசோதனை ஜூலை 20 ம் தேதி முடிவடைந்தது.


இது தவிர, வெக்டர் மாநில ஆராய்ச்சி மையமான வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி தயாரித்த இரண்டாவது கோவிட் -19 தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். மேலும் தடுப்பூசியின் பக்க விளைவுகள் எதுவும் அவர்களிடம் காணப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.


இதற்கிடையில், COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை மாஸ்கோ அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.


ALSO READ | சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்... அதிர்ச்சி தகவல்...!!!


அனைத்து தடுப்பூசி  பரிசோதனையில் ஈடுபட்ட அனைவரும், வீட்டிற்கு அனுப்பபடுவதற்கு முன்னர் பரிசோதனையின் அனைத்து நிலைகளிலும் பங்கேற்க வேண்டும் என்று WHO வலியுறுத்தியுள்ளது.


இருப்பினும், ரஷ்யா தனது முதல் மருத்துவ பரிசோதனை தொடர்பான எந்த அறிவியல் தரவையும் இதுவரை வெளியிடவில்லை.


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,241  பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா  பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 8,77,135 ஆக உள்ளது என்று அந்நாட்டின் கொரோனா வைரஸ் கட்டுபாட்டு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.