புதுடெல்லி: கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது சாண்டா கிளாஸ் (Santa Claus). குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாண்டாவை பார்த்தாலும், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசு பெற்றாலும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் (Christmas), வழக்கம் போல் கோலகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்படவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் மக்களும், உலகமும் அதை ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கிவிட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல், கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா கிளாஸ் (Santa Claus) மக்களின் மனதிற்கு இதமளிக்க வழக்கம் போல் பரிசு கொடுக்க களத்தில் இறங்கினார்.


ஆனால், பெல்ஜியம் நாட்டில் மகிழ்ச்சியைப் பரப்பி பரிசு கொடுக்கும் சாண்டா கிளாஸ் (Santa Claus) கொடுத்த பரிசு கொரோனா வைரஸ் தொற்றாக அமைந்தது மிகப்பெரிய சோகம். பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசிக்கும் முதியவர்களைப் பார்க்க சாண்டா கிளாஸாக வந்தார் ஒரு மருத்துவர். ஆனால் அவர் சென்ற பிறகு 157 பேர் நோய்வாய்ப்பட்டனர், அவர்களில் 18 பேர் இறந்துவிட்டனர்.


Also Read | இந்தியாவில் மார்ச்-மே மாதங்களில் ‘Super-spreader’ கொரோனா வைரஸ் இருந்தது: நிபுணர்


பெல்ஜியத்தில் (Belgium) உள்ள பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மக்களுக்கு, சாண்டா கிளாஸிடமிருந்து ஒரு பரிசை வாங்கும் கனவை நனவாக்க வந்த ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று இருந்திருக்கிறது. அவர் சாண்டாவாக வேடமணிந்து பராமரிப்பு இல்லத்திற்கு வந்து பரிசுகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் அதன்பிறகு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களில் 121 பேரும், 36 ஊழியர்களும் சாண்டாவிடம் இருந்து வந்த கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 18 பேர் இறந்துவிட்டனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.  


முதியோர் இல்லத்திற்கு வந்த சாண்டா கிளாஸ்
வயதானவர்களின் மன உறுதியை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சாண்டா வேடம் அணிந்திருந்த மருத்துவர் (Doctor). ஆனால், இப்போது உலக மக்களின் மன உறுதியையே ஆட்டிவைக்கும் காரணியாக மாறிவிட்டது கொரோனா பாதிப்பு.  


Also Read | COVID-19: இந்தியாவில் பல மாதங்களுக்கு பிறகு மிகக்குறைந்த அளவில் தொற்று பாதிப்பு


பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் பராமரிப்பு இல்லத்தின் (Antwerp's care home) ஊழியர்கள் அங்கு வசிக்கும் முதியோரின் மன உறுதியை அதிகரிக்க விரும்பினர். எனவே, கிறிஸ்துமஸ் (Christmas) நன்னாளை முன்னிட்டு, வயதானவர்களுகு பரிசளிக்க சாண்டா கிளாஸை அழைக்க திட்டமிட்டனர். இதற்காக, பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை பராமரிக்கும் ஒரு மருத்துவரை சாண்டா கிளாஸ் மாற்றினார்கள்.


பராமரிப்பு இல்லத்திற்கு வந்த 'சாண்டா கிளாஸ்' ஏற்கனவே COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்  
அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் படி, 2 வாரங்களுக்கு முன்பு, மருத்துவர் சாண்டா கிளாஸாக வேடம் தரித்தார். பராமரிப்பு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கூற்றுப்படி, முதியோர் இல்லத்திற்கு வந்தபோது சாண்டா கிளாஸின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சாண்டா கிளாஸ் (Santa Claus) முதியவர்களுடன் நேரத்தை செலவிட்டார், அவர்களுக்கு பல பரிசுகளை (gifts) விநியோகித்தார். ஆனால் அந்த நேரத்தில், சாண்டா கிளாஸ் (Santa Claus) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அவருக்கே தெரியாது. 


Also Read | Football Legend மரடோனாவுக்கு ஆறடி கேக் சிலை அமைத்த தமிழக பேக்கரி


சாண்டா கிளாஸ் (Santa Claus) வேடம் தரித்த மருத்துவருக்கு உடல்நிலை மோசமடைந்தபோது   அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மருத்துவரை கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை என்று தெரியவந்தது. அதையடுத்து அவருடன் தொடர்பில் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசித்தவர்களுக்கு பரிசோதனை செய்தபோது அதில் 121 பேரும், 36 ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR