இந்தியாவில் மார்ச்-மே மாதங்களில் ‘Super-spreader’ கொரோனா வைரஸ் இருந்தது: நிபுணர்

"சூப்பர்-ஸ்ப்ரெடர்" வைரஸ் பிறழ்வுக்கு ஏ4 (A4) என்று பெயரிடப்பட்டதாகவும் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோமிக்ஸ் அண்ட் இண்டெக்ரேடிவ் பயாலஜி (IGIB) இயக்குனர் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2020, 06:23 PM IST
  • "சூப்பர்-ஸ்ப்ரெடர்" வைரஸ் பிறழ்வுக்கு ஏ4 (A4) என்று பெயரிடப்பட்டதாக IGIB இயக்குனர் தெரிவித்தார்.
  • இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.
  • இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்துள்ளது.
இந்தியாவில் மார்ச்-மே மாதங்களில் ‘Super-spreader’ கொரோனா வைரஸ் இருந்தது: நிபுணர் title=

புதுடில்லி: இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டும் உருமாறிய கோவிட் -19 வைரஸ் பரவவில்லை. மார்ச் முதல் மே வரையிலும் இந்தியாவிலும் ‘Super-spreader’ கொரோனா வைரஸ், அதாவது தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் இருந்தது என்று ஒரு நிபுணர் தெரிவித்தார்.  இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோமிக்ஸ் அண்ட் இண்டெக்ரேடிவ் பயாலஜி (IGIB) இயக்குனர் அனுராக் அகர்வால், இந்தியாவில் கொரோனா வைரஸில் பல பிறழ்வுகள் இருந்திருக்கலாம் என்று கூறினார்.

இருப்பினும், இந்த "சூப்பர்-ஸ்ப்ரெடர்" கோவிட்-19 (COVID-19) தானாகவே இறந்து விட்டது என்று அவர் கூறினார். இந்த வைரஸ்  பிறழ்வுக்கு ஏ4 (A4) என்று பெயரிடப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

"A4  கண்டறியப்பட்ட போது, அது தானாகவே இறந்து விடும் என்பது தெரியவந்ததால், அது குறித்த அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று அந்த நிபுணர்  கூறினார். அது போன்ற பல பிறழ்வுகள் இந்தியாவில் உருவாகி இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பாக குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (Corona Virus) பரவியது கண்டறியப்பட்டது. தங்கள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்ததற்கு இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தான் காரணம் என் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

நிலைமையை சமாளிக்க இங்கிலாந்து தற்போது நான்காம் கட்ட லாக்டவுனை (Lockdown) அறிவித்துள்ளது. மறுபுறம், இந்தியா தற்போது நிலைமையை மதிப்பிட்டு வருவதோடு,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்துள்ளது.

எனினும், நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாட்டில் தொடர்ந்து ஆறாவது நாளாக 25,000 க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ALSO READ | இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் சரிவு.. புதிய பாதிப்புகள் 22,272  மட்டுமே..!!  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News