COVID-19: இந்தியாவில் பல மாதங்களுக்கு பிறகு மிகக்குறைந்த அளவில் தொற்று பாதிப்பு

இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய தொற்று பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை  10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவாகின்றன என அமைச்சகம் கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2020, 03:55 PM IST
  • கடந்த 24 மணி நேரத்தில் 21,430 பேர் குணமாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 97,61,538 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் பதிவாகும் புதிய தொற்று பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவாகின்றன
COVID-19: இந்தியாவில் பல மாதங்களுக்கு பிறகு மிகக்குறைந்த அளவில் தொற்று பாதிப்பு title=

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  18,732 புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் 279 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 27) பகிர்ந்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 1,01,87,850 ஆக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய ஆறு மாதங்களில் இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய  COVID-19  தொற்று தொடர்பான எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவில், பதிவாகியுள்ளது.  ஜூலை 1 ஆம் தேதி, இந்தியாவில் 18,653 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இன்று 18,732 புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கடந்த 30 நாட்களில் தொடர்ச்சியான இந்தியா தினசரி  புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. புதிய தொற்று பாதிப்புகளை விட அதிகமான அளவில் குணாமடையும் நபர்களின் எண்ணிக்கை உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 21,430 பேர் குண்மடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,61,538 ஆக அதிகரித்துள்ளது. குண்மடையும் விகிதம் 95.82 சதவீதமாக உள்ளது, தற்போது 2,78,690 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

ALSO READ | Republic Day Parade பங்கேற்க தில்லி வந்திருக்கும் 150 ராணுவத்தினருக்கு Covid +ve 

இந்தியாவில் COVID-19 காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகும். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1,47,622 என்ற அளவை எட்டியுள்ளது.

COVID-19  பரிசோதனை, 16,81,02,657 பேருக்கு செய்யப்பட்டுள்ளன. 9,43,368  பேருக்கு சனிக்கிழமை (டிசம்பர் 26) அன்று பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று வரை மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்கிறது.  அங்கு இது வரை மொத்தம் 19.16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 49,189 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய தொற்று பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவாகின்றன எனவும் அமைச்சகம் கூறியுள்ளது. இவை கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி.

ALSO READ | உடல் தகனத்திற்கு பசு வரட்டியை பயன்படுத்த தெற்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News