நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால், உங்களுக்கோர் நற்செய்தி.  விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் காபி குடிப்பதால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபியை உட்கொள்பவர்கள், காபி உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.


"காபி குடிப்பதால்,  CRP, இன்டர்லூகின் -6 (ஐ.எல் -6) (interleukin-6 -IL-6), மற்றும் ட்யூமர் நெக்ரோஸிஸ் காரணி I (TNF-I) போன்ற  பொருட்களுடன் ஏற்படும் வினைகளின் காரணமாக கோவிட் -19 தீவிரம் மற்றும் இறப்பு ஆகியவற்றை குறைப்பதில் நெருங்கிய தொடர்புடையவை" என்று ஆய்வு கூறுகிறது.


இது மேலும் கூறுகையில், "காபி நுகர்வு வயதானவர்களுக்கு நிமோனியாவின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது. ஒன்றாக எடுத்துக்கொண்டால், கோவிட் -19 க்கு எதிரான காபியின் நோயெதிர்ப்பு எதிர்ப்பு விளைவு நம்பத்தகுந்ததாகும், மேலும் விசாரணைக்கு தகுதியானது."


ALSO READ | என்ன செய்தாலும் வெயிட் குறையலையா; பப்பாளி காய் ஒன்றே போதும்


இங்கிலாந்து பயோபாங்கில் 40,000 பேர்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. விஞ்ஞானிகள் காபி, எண்ணெய் மீன், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பச்சை காய்கறிகள், புதிய பழம், சிவப்பு இறைச்சி மற்றும் கோவிட் போன்ற உணவு காரணிகளுக்கும் கொரோனா பரவலுக்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வின் மூலம்  பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை குறைவாக உட்கொள்ளுதல் மற்றும் அதிக காய்கறிகளை உட்கொள்வது COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்பதையும் காண முடிந்தது. 


"ஊட்டச்சத்து காரணிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்துவமான அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது, எனவே COVID-19 நோய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வது பயனளிக்கும் " எனஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


"இந்த ஆய்வின் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது ஏற்கனவே இருக்கும் COVID-19 பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக  இருக்கலாம்" என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறினர்.


ALSO READ | Piercing: 15 வயது பள்ளி சிறுமியின் உயிருக்கு எமனான பேஷன்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR