பிரேசிலில் உள்ள பள்ளி மாணவியான 15 வயதான இசபெல்லா எட்வர்டா டிசோசா தனது புருவங்களை அழகு படுத்த அதில் அணிகளன் அணிய குத்திக் கொண்ட செயல் அவரது உயிரை குடித்து விட்டது,
புருவங்களில் அணிகலம் அணிய துளையிட்ட பிறகு கடுமையான தொற்று ஏற்பட்டட்து. பள்ளி மாணவி இசபெல்லா எட்வர்டா டிசோசா தனது புருவத்தில் துளையிடுவதை வீட்டிலேயே செய்தார். இதன் பின்னர் அவருக்கு கடுமையான தொற்று ஏற்பட்டது, அவரது முகம் பலூன் போல வீங்கியது.கண்ணிலும் வீக்கம் ஏற்பட்டதால் கண்ணை திறக்க கூட முடியவில்லை.
தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸில் வசிக்கும் இசபெல், ஒரு நண்பரின் உதவியுடன் தனது வீட்டில் புருவங்களில் அணிகலன் அணிந்து கொள்ள குத்திக் கொண்டதாக தி சன் அறிக்கை கூறுகிறது. நிபுணத்துவம் இல்லாதவர் கையாணடதால், முக்கிய நரம்புகள் ஏதேனும் பாதிப்படைந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
துளையிட்ட 3 நாட்களுக்குள், இசபெல்லாவுக்கு கடுமையான பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. அவன் முகம் கடுமையாக வீங்கியிருந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு 4 முறை மாரடைப்பு ஏற்பட்டது.
புருவத்தில் குத்திக் கொண்ட ஒரு வாரத்தில், இசபெல்லாவின் நிலை மோசமடைந்து, குத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் இறந்தார்.
இசபெல்லா உயிர் பிழைத்திருந்தாலும், தொற்று தீவிரமாக இருந்ததால் கண்பார்வை இழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். (Image credit: The sun)