புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 34,703 புதிய நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 110 நாட்களில், இந்தியாவில் மிக குறைந்த அளவில் தினசரி தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 6, 2021) காலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 4,64,357 ஆக குறைந்துள்ளது, இது 101 நாட்களில் மிகக் குறைவான அளவாகும். பரிசோதனை செய்தவர்களில், தொற்று உறுதியானவர்கள் விகிதம், அதாவது பாஸிடிவிடி விகிதத்தை பொறுத்தவரை வாராந்திர விகிதம் தற்போது 2.40% ஆகவும், தினசரி விகிதம் 2.11% ஆகவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்து விட்டனர். 42,352 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் COVID-19 காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 4,02,728 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,97,52,294 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி, கோ-வின் உலகளாவிய மாநாட்டில் உரையாற்றினார், நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒடொய தொற்று நோயை உலகம் காண்கிறது என்று கூறினார். வளர்ந்த நாடுகள் கூட இந்த ஒரு சவாலை தனியாக தீர்க்க முடியாது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், SBI ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை ஆகஸ்ட் நடுப்பகுதியில் இந்தியாவைத் தாக்கும் என்றும், செப்டம்பர் மாதத்தில் தொற்று பாதிப்பு உச்சத்தை அடையக்கூடும் என்றும் கூறியுள்ளது.
"மே 7 ஆம் தேதி இந்தியாவில் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியது, தற்போதைய தரவுகளின் படி, ஜூலை இரண்டாவது வாரத்தில் தினசரி தொற்று பாதிப்புகள் 10,000 என்ற அளவை எட்டலாம் " என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் கூறினார்.
Also Read | ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR