எலும்பு ஆரோக்கியத்திற்கு எள்ளு: உடலின் சீரிய செயல்பாடுகளுக்கு எலும்புகள் வலுவாக இருப்பது மிகவும் முக்கியமாமனது ஆகும். உடலுக்கு வடிவத்தைக் கொடுத்து, நமது உருவத்தை கட்டமைக்கும் எலும்பே, நாம் நிற்கவும் நடக்கவும் அடிப்படையானவை. நம் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடைந்தால் உடல் பலவீனம், முதுகுவலி, நடப்பதில் சிரமம், பற்கள் மற்றும் ஈறுகள் பலவீனமடைவது, மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு என அறிகுறிகள் தோன்றும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எள்ளின் திறன்


எலும்புகளின் வலுவுக்காக நமது உணவில் சேர்க்கும் உணவுகளில் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். எலும்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்படுத்தும் சில உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது எள் என்னும் மாமருந்து. 


எள்ளுச்செடியின் நன்மைகள்


எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்வை ஆகும். எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்ளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருக்கிறது என்றால், வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.


மேலும் படிக்க | வலுவான எலும்புகள் வேண்டுமா? இந்த ‘சூப்பர்’ உணவுகளை சாப்பிட்டால் போதும்


எள்ளில் உள்ள எண்ணெய்ச்சத்து


எள்ளில் உள்ள எண்ணெய் சத்து மிகவும் சத்துள்ளது. எள்ளு விதைகளில் சர்க்கரை நோயை தடுக்கும் சிறப்பு பண்புகள் உள்ளன. கால்சியம் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளையும், எலும்பு தொடர்பான பிரச்சனையையும் தீர்க்கும்  என்பதால் உணவில் எள்ளு பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


எலும்பு அடர்த்தியை அதிகமாகும் எள்ளை தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால் எலும்புகள் தேய்மானம் ஏற்படாமல் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.


எள்ளில் உள்ள சத்துக்கள்  
கால்சியம், புரதம், கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை என எலும்புக்கு தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எள்ளில் அதிக அளவில் இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மற்றும் ட்ரிப்போபான் போன்ற இயற்கையான கரிம சேர்மங்கள் எள்ளில் இருக்கிறது.  


எள்ளுடன் கூட்டு வைக்கும் வெல்லம்


எள்ளை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால், உடல், எள்ளில் உள்ள இரும்புச் சத்தை உடல் எளிதாகக் கிரகித்துக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது. மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும், எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும்.



எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய், உணவு சமைக்க ஆரோக்கியமான எண்ணெய் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நல்லெண்ணையை மட்டும், சமைக்காமலும் உண்ணலாம் என்பது இதன் சிறப்பம்சம்.  


மேலும் படிக்க | எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் ‘சில’ சைவ உணவுகள்!


தினசரி ஒரு ஸ்பூன் எள்ளை ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.  நீரிழிவு, குறைந்த ரத்த அழுத்தம் இவற்றைக் குணப்படுத்துகிறது. புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் செய்கிறது.


மனத்தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவும் எள்ளு, உடலைத் தூய்மைப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்பட்டால், இதில் உள்ள துத்தநாகம் கொலாஜன் உருவாவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், தலைமுடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் வாய்ப்புண் குணமாகுக்ம்.  


எள் உருண்டை, எள் எண்ணெய், எள்ளுப் பொடி, எள்ளு சாதம் என எள்ளை பலவிதங்களிலும் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு ஆரோக்கியம் வலுப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உங்கள் எலும்புகள் ரொம்ப பலவீனமாக இருக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ