புது டெல்லி: இந்த நேரத்தில் கோவிட் -19 தொற்றுநோய் (COVID-19) நாட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நிலைமை குறித்து பெரும்பாலான இந்தியர்கள் பெரும் கவலை, சோகம் மற்றும் கடும் கோபத்தில் உள்ளனர். ஜன்சத்தா என்ற பத்திரிக்கை அளித்த தகவல் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் நாட்டின் சுகாதார அமைப்பு தோல்வி அடைந்துள்ளது. தற்போது நாடு முன்னோடியில்லாத வகையில் பெரும் நெருக்கடியை எதிர் கொள்கிறது. தொற்றுநோய் பரவி வரும், இந்த நேரத்தில் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய உள்ளூர் வட்டாரங்களால் ஆய்வு (Survey) மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கொரோனா சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்களின் அணுகுமுறை என்ன என்பதை அறிந்து கொள்வதே கணக்கெடுப்பின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.


61% இந்தியர்கள் கோபமாகவும், பதட்டமாகவும் மனச்சோர்வடைந்துள்ளனர்:


இந்தியாவில் கோவிட் -19 இன் இரண்டாவது அலை நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகின்றன. மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் (Oxygen), படுக்கைகள் இல்லாதது மக்கள் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை (Psychological Impact) ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ |  கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இவற்றில் கவனம் செலுத்தினால் விரைவாக குணமடையலாம்


கடந்த இரண்டு மாத கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலைகளில் சிக்கி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் மனநிலையைப் பற்றி கேட்டபோது, அதற்கு ​​பதிலளித்தவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் "மிகவும் கவலை"யாக  இருப்பதாகக் கூறினர். எட்டு சதவீதம் பேர் தாங்கள் "மனச்சோர்வடைந்து உள்ளதாகவும்" கூறியுள்ளனர்.


சுமார் 20 சதவீதம் பேர் தாங்கள் "வருத்தமாகவும் கோபமாகவும்" இருப்பதாகவும், 10 சதவீதம் பேர் "கடும் கோபமாக" இருப்பதாகவும், ஏழு சதவீதம் பேர் மட்டுமே "அமைதியாக" இருப்பதாகவும் கூறினர். சுமார் 28 சதவீதம் பேர் "நம்பிக்கை தான் எல்லாம்" என்று கூறியுள்ளனர். 


கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, நாடு முழுவதும் 61 சதவீத இந்தியர்கள் கோவிட் -19 தொற்று காரணமாக கோபமாக, வருத்தமாக உள்ளனர். உள்ளூர் வட்டாரங்களில் நடத்திய கணக்கெடுப்பில் 8,141 பேர் பங்கேற்றனர்.


ALSO READ |  உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு சோனு சூத் விமானம் அனுப்பி உதவி!


கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்வி, நிலைமையைக் கையாள இந்திய அரசு சரியான பாதையில் செல்கிறதா என்று நினைக்கிறார்களா? எனக் கேட்டபோது, சுமார் 41 சதவீதம் பேர் "ஆம்" என்றும், 45 சதவீத குடிமக்கள் "இல்லை" என்றும் சொன்னார்கள். 14 சதவீதம் பேருக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்கள். இந்த கேள்விக்கு மொத்தம் 8,367 பேர் பதிலளித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR