அளவிற்கு மிஞ்சிய கீரை சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
கீரையின் பக்கவிளைவுகள்: கீரைகள் மிகவும் ஆரோக்கியமானது தான் என்றாலும், அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும்.
பச்சை இலைக் காய்கறிகள், அதிலும் கீரைகள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. நீங்கள் கீரையை உட்கொள்ளும்போது, பல பெரிய நோய்கள் உங்களை விட்டு விலகும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறி உடலில் இரத்தம் எளிதில் உருவாகிறது. எனவே ரத்த சோகையை போக்க, ஹீமோகிளோபினை உருவாக்கும் கீரை அவசியம் நமது டயட்டில் இருக்க வேண்டும். இந்த பச்சைக் காய்கறியில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பலர் அதை விருப்பமுடன் சாப்பிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து சாப்பிடுபவரின் உடலுக்கு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கின்றன. இது தவிர, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பச்சைக் காய்கறி ஒரு வரப்பிரசாதம். அதாவது, இதை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் கீரையை சாப்பிடுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தால் நஷ்டத்தை நீங்கள் தாங்க வேண்டியிருக்கும்.
கீரையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
அளவிற்குமிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. கீரையின் நிலையும் அப்படித்தான், எனவே இதை ஒரு குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
1. சிறுநீரக கல்
கீரையை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினைகள் ஏற்படலாம், ஏனெனில் இந்த பச்சை இலைக் காய்கறியில் கால்சியம் ஆக்சலேட் ஏராளமாக உள்ளது. இதன் அதிகப்படியான உட்கொள்வதால் சிறுநீரகத்தில் சிறிய கற்களை உருவாக்கும்.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!
2. வயிற்று பிரச்சனை
கீரை செரிமான அமைப்புக்கு சிறந்ததாக கருதப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் பல சுகாதார நிபுணர்கள் இதை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆனால் நீங்கள் அதை வரம்பிற்கு மேல் சாப்பிட்டால், அது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
3. மூட்டு வலி
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கீரையை அதிகமாக உட்கொண்டால், மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் வரலாம். அதனால் தான் கீரையை கண்டிப்பாக சாப்பிடுங்கள் ஆனால் கவனமாக இருக்கவும்.
மேலும் படிக்க | முள்ளங்கி இலை: சிறுநீரக கல் முதல் மூலநோய் வரை, பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ