உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்!!
வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.
* ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், அரை எலுமிச்சை சாறு கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.
* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
* அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
* கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
* தினமும் காலையில் நன்கு வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடையில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
* சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும்.
* வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
* உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாகும்.