மூளைக்கும் மிகுதியான சக்தி தரும் மாதுளையின் நன்மைகள்
நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.
கொரோனா தொற்றுநோய்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உடலின் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையில் மட்டுமே கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்றுநோயை வெல்ல முடியும்.
மாதுளை ஆரோக்கியத்தின் பொக்கிஷம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மக்கள் பல்வேறு பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத பொருட்களை உட்கொள்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, மாதுளை அத்தகைய ஒரு பழமாகும், இது ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது. மாதுளையின் நன்மைகளைப் பற்றி நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
மாதுளையின் நன்மைகள்
மாதுளை சாப்பிடுவதால் வயிற்றின் ஜீரண சக்தி பலப்படும். வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறார்கள்.
உடல் தசைகளை வலிமைக்கும்
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மாதுளையில் பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. மாதுளையில் புரதம், வைட்டமின் சி, நார்ச்சத்து, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மாதுளையை உட்கொள்வதால் உடல் தசைகள் வலுவடைந்து கண்பார்வை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதற்கு மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால், உடலில் இரத்த அழுத்தம் குணமாகும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் லோ பிபி, ஹை பிபி பிரச்னையும் வெகுவாகப் சரியாகிவிடும்.
உடல் பருமனில் இருந்து விடுபட
மாதுளையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. அதாவது, மாதுளையை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு, சர்க்கரை நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | போலி பெருங்காயத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்: போலியை கண்டுபிடிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR