புளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் அதன் இலைகளிலிருந்து வரும் தேநீரும் நன்மை பயக்கும் என்பது சிலருக்கே தெரியும். புளி இலை டீ எப்படி தயாரிக்கப்படுகிறது, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் eன்பதை இங்கே நாம் விரிவாக காண்போம். இந்த ஸ்பெஷல் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் உடல் எடையை குறைப்பது வரை நன்மை பயக்கும். எனவே இந்த தேநீர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலஸ்ட்ரால் கட்டுப்படும்
புளி இலையில் டீ குடிப்பதால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். இந்த வழக்கில் மாரடைப்பு அபாயமும் குறைகிறது. அனைவருக்கும் தெரியும், உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது, ஒன்று நல்லது மற்றும் மற்றொன்ரு கெட்டது, இதில் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏர்படுத்தும். இந்த வழக்கில், புளி இலை தேநீர் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | வறண்ட கண்களால் வாட்டமா? இவை காரணமாக இருக்கலாம், இப்படி தீர்வு காணலாம் 


எடை கட்டுப்படுத்தப்படும்
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் இன்ரைய காலக்கட்டதில் ஒவ்வொரு நபரும் தங்களின் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். அதன்படி உடல் எடை குறைக்க புளி தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தொடர்ந்து புளி டீ குடிக்கவும்.


இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படும்
புளி இலைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன. இது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் திறம்பட உதவுகிறது. இதனுடன், புளி சாற்றில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.


செரிமானமும் மேம்படும்
புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான சாறுகளை (பித்த அமிலம்) தூண்டுகிறது, இது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. அதாவது, இந்த டீயை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR