உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் வேளையில், அதிலிருந்து விடுபட, பல நாடுகளும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வுஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸை விச்ட 10 மடங்கு வீரியமுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு D614G கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!!


இதில், அதிர்ச்சியூட்டும் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்தியாவில் இருந்து சமீபத்தில் மலேஷியா சென்ற ஒருவருக்கு, சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபு D614G பாதிப்பு இருப்பது தெரியவந்தது.


இது வுஹானில் இருந்து வந்த கொரோனா வைரஸை விட 10 மடங்கு தீவிரமானது என மலேஷிய சுகாதார துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


இதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பையும்  மலேசிய அரசு நாடியுள்ளது.


மேலும் இந்த புதிய வைஸ் திரிபு அல்லது பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, தற்போதைய தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் சிக்கலை ஏற்படுத்தலாம் என மலேசிய சுகாதார அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | அட சொன்னா நம்புங்க.... இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத ஒரே இடம் எது தெரியுமா..!!!


 இந்தியாவிலிருந்து வந்தவரிடம் இருந்து  மட்டுமல்லாமல் பிலிப்பைன்ஸில் இருந்து வந்தவர்களிடமும் இந்த திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 18 லட்சம் பேர் ஆகும். ஆகஸ்ட் 10-ம் தேதி இந்த எண்ணிக்கை  2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 18 லட்சம்  என்ற அளவிற்கு அதிகரித்து விட்டது.