அட சொன்னா நம்புங்க.... இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத ஒரே இடம் எது தெரியுமா..!!!

என்ன உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா... ஆனால், இது  உண்மை. இந்தியாவின் கொரோனா தொற்று 25 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ள நிலையில், ஒரு இடம் மட்டும் கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 08:47 PM IST
  • நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கேராளாவில் தான் கண்டறியப்பட்டது.
  • இந்தியாவில் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,89,682 ஆக அதிகரித்துள்ளது.
  • ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவில் தினமும் 60,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அட சொன்னா நம்புங்க.... இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத ஒரே இடம் எது தெரியுமா..!!! title=

உலகமே கொரோனாவில் பிடியில் சிக்கி தவிக்கிறது.  இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. அந்நிலையில் தான் இந்த ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து இடங்களிலும் குறிப்பாக, இந்தியாவின் பெருநகரங்களில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த போது. இந்தியாவின் வடகிழக்கு பகுதி COVID-19 வைரஸை அண்ட விடாமல் எதிர்த்து வந்தது. 

ஆனால் இப்போது 1,000 க்கும் குறைவான தொற்று பாதிப்புகள் உள்ள ஒரே வட கிழக்கு மாநிலம் மிசோரம். சிக்கிம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால், லட்சத்தீவுகள் என்னும் ஒரே யூனியன் பிரதேசம் தான் கொரோனா வைரஸை அண்ட விடாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது.

இது கேரளாவுக்கு அருகில் உள்ள யூனியன் பிரதேசம், இந்தியாவின் மிகச்சிறிய தீவுகள் கூட்டமான லட்சத்தீவுகளில் 36 தீவுகள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 32 சதுர கிலோமீட்டர். அனைத்து தீவுகளும் கேரளாவின் கடற்கரை நகரமான கொச்சியில் இருந்து  220 முதல் 440 கிலோட்டர் தூரத்தில் உள்ளவை.

ALSO READ | முன்னாள் கிரிக்கெட் வீரரும் உ.பி அமைச்சருமான சேதன் சவுகான் கொரோனாவுக்கு பலி...

நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கேராளாவில் தான் கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்தே, லட்சத்தீவுகள் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கியது.

பிப்ரவரி 1ம் தேதி முதலே, லட்சத்தீவிற்கு வரும் விமான பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தும் வழிமுறை தொடங்கியது.

ALSO READ | கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!!

இந்த யூனியன் பிரதேச நிர்வாகம், கொச்சியில் குவாரண்டைன் செண்டர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. லட்சத்தீவுக்கு வர விரும்பும் எவரும் கொச்சியில் முதலில் குவாரண்டைன் செய்யப்பட வேண்டும். பின்னர் அவர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு அவர்கள் லட்சத்தீவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

லட்சத்தீவுகளில் சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்று யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது. அங்கு மூன்று மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன.

இந்தியாவில், புதிதாக 63,490 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,89,682 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குணமானவர்களின் மொத்த  எண்ணிக்கை 18,62,258 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொற்றிலிருந்து குணமடைபவர்களின் சதவிகிதம் 71.91 சதவீதமாக உயர்ந்துயுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவில் தினமும் 60,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News