கோவிட் 19 தொற்று  சமூக பரவலாக மாறும் என  கேரள அமைச்சர் அச்சம் வெளியிட்டுள்ளார்.  இதனால் கட்டுபாட்டு மண்டலங்களில் கடுமையான லாக்டவுனை அமல்படுத்த கேரள அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் (Kerala) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக 200 க்கும் மேற்பட்ட புதிய கோவ்ட் 19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் கொரோனா வைரஸ் (corona virus) தொற்று எண்ணிக்கை 5,429 ஆக உள்ளது. இது மிக அதிக எண்ணிக்கை இல்லை என்றாலும், தொற்று ஏற்பட்டுள்ள சிலருக்கு, எங்கிருந்து தொற்று ஏற்ப்பட்டது என சி கண்டறிய இயலாத காரணமாக சில பிராந்தியங்களில் சமூகம் பரவல் ஏற்படும் நிலை இருவாகியுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ALSO READ |  கோவிடா, கோவினா, க்வாரண்டினா - மணிபூரில் பிறந்த கொரோனா கால குழந்தைகள்


மாநிலத்தில் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொற்று பரவல் ஒரு எரிமலையாக வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிட்டார்.


தற்போது வரை எந்த சமூக பரவல் ஏற்படாததால், அது ஏற்படாது என்று அர்த்தமல்ல என்று அமைச்சர் கூறியதாக PTI செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று சுரேந்திரன் கூறினார்.


பெரும்பாலான புதிய தொற்று பாதிப்புகள், மாநிலத்திற்குத் திரும்பியவர்கள் மூலம் ஏற்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்தோ அல்லது பிற மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் மூலம் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இந்த கவலைக்கான முக்கிய காரணம்.


ALSO READ | தில்லியில், தெரு நாய்களைக் காப்பாற்ற சென்றவர்கள் தாக்கப்பட்ட பரிதாபம்!!


கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும், ஒரு போலீஸ்காரர் மற்றும் உணவு டெலிவரி செய்யும் நபருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து உணவு  டெலிவரி செய்பவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள் என்றும் சுரேந்திரன் கூறினார்.


இது தவிர கொரோனா தொற்று ஏற்பட்டு குணம்டைந்த  கேரள பெண் ஒருவருக்கு மீண்டும் கோவிட்-19 (Covid-19) தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து மாநில மருத்துவ வாரியம்  ஆய்வு செய்து வருகிறது


இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA), கேரள பிரிவை சேந்த வல்லுநர்கள், கட்டுப்பாட்டு பகுதிகளில், பகுதிகளில் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தவும், சமூக பரவலைத் தவிர்க்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் மாநில அரசிடம் அறிவுறுத்தியுள்ளனர்.


மாநிலத்திற்குள் நோய் வேகமாக பரவுவதால் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என முதல்வர்  பிணராயி விஜயன் கூறியுள்ளார்