இந்த 4 பழங்கள் சர்க்கரை நோயாளிக்கு அருமருந்தாகும்
Diabetes Diet: மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பழங்களை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், அப்படி செய்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது முக்கியம், அதில் பழங்களும் அடங்கும், ஆனால் சர்க்கரை நோயாளிகள் எல்லா பழத்தையும் சாப்பிட முடியாது.
இன்றைய சூழலுக்கு நல்ல உடல்நலனை பெற எல்லோரும் சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. பழங்கள் நார் மற்றும் நீர் உள்ளடக்கம் நிறைந்தவை. இது உடலில் சர்க்கரை உறிஞ்சுதல் விகிதத்தை குறைக்கும். சரி, நீரிழிவு நோயாளிகள் தவிர்க்காமல் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
1. கிவி
கிவியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அத்துடன் வைட்டமின்-சி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் கிவி ஜூஸ் மற்றும் சாலட் சாப்பிட வேண்டும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
2. நாவல் பழம்
கோடை காலத்தில் நாவல் பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீரிழிவை கட்டுக்குள் வைக்க நாவல் பழங்கள் உதவுவதாக ஆய்வுகளும் நிரூபித்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் நோயைக்கட்டுக்குள் கொண்டுவர நாவல் பழங்களும் அதன் கொட்டைகளும் உதவுகிறது. மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த நாவல் பழத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, எரிசத்து நிறைந்திருக்கிறது.
3. ஆரஞ்சு
நீரிழிவு நோயாளிகளுக்கும் ஆரஞ்சு ஒரு மருந்து. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவுகிறது.
4. கொய்யா
கொய்யாப்பழத்தை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது, ஏனெனில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ பண்புகள் இந்த பழத்தில் காணப்படுகின்றன. இது தவிர, நார்ச்சத்தின் பண்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொய்யாவில் குளுக்கோஸ் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
5. ஆப்பிள்
இது தவிர, சர்க்கரை நோயாளிகளுக்கும் ஆப்பிள் மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR