பச்சை பட்டாணியின் பயம் காட்டும் பக்க விளைவுகள்: கம்மியா சாப்பிடுங்க மக்களே
Side Effects of Peas: பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
Side Effects of Peas: குளிர்காலத்தில் பச்சை காய்கறிகள் அதிகமாக விற்கப்படுகின்றன. இந்த சீசனில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளும் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பச்சை பட்டாணி அதிகமாக விற்கப்படுகின்றது. இதை பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள். எனினும், எதுவுமே அளவுக்கு மீறினால் விஷம்தான். பச்சை பட்டாணியும் அதற்கு விதிவிலக்கல்ல.
பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பட்டாணியின் பக்க விளைவுகள்
பட்டாணி ஒரு சத்தான காய்கறி. ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் நலனில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள் பற்றி இங்கே காணலம.
Stomach Problems: வயிற்றுப் பிரச்சனைகள்
பட்டாணி நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி. ஆகையால் இதை அதிகமாக சாப்பிட்டால் வாயுத்தொல்லை, வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.
Digestion: செரிமான பிரச்சனைகள்
பட்டாணியில் லெக்டின் என்ற புரதம் உள்ளது. அதை அதிகமாக உட்கொண்டால், அது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதிகமாக பட்டாணி சாப்பிடுவதால் வயிற்று வலி, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Kidney Problems: சிறுநீரக பிரச்சனைகள்
பட்டாணியில் அதிக அளவு பியூரின் உள்ளது. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இதனால், சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. யூரிக் அமில நோயாளிகள் பட்டாணியை அளவோடு மட்டும் சாப்பிடுவது நல்லது.
Weight Gain: எடை அதிகரிப்பு
பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் கொழுப்பு நிறைந்த பொருட்களை உட்கொள்கிறார்கள். இவற்றுடன் பட்டாணியை அதிகமாக உட்கொண்டால், அது உடலில் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுக்கு வழிவகுக்கும். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... இந்த பிரச்சனைகள் இருந்தால் கொஞ்சம் தள்ளியே இருங்க
மருந்துகளுடன் பட்டாணி உட்கொள்வதால் வரும் பக்க விளைவுகள்:
பட்டாணி சில மருந்துகளுடன் எதிர்மறையாக செயல்படக்கூடிய சில கூறுகளையும் கொண்டுள்ளது. ஆகையால், நீங்கள் ஏதேனும் மருந்துகளை வழக்கமாக உட்கொண்டால், பட்டாணி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு பட்டாணி உட்கொள்ளலாம்?
பெரும்பாலும் எந்த ஒரு பொருளையும் நாம் தினமும் சாப்பிடுவதில்லை. இருப்பினும், ஒருவர் தினமும் பட்டாணி சாப்பிட்டால், சிறிய அளவிலேயே சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 1 கப் அதாவது சுமார் 150 கிராம் வேகவைத்த பட்டாணி சாப்பிடுவது நல்லது. மற்ற காய்கறிகளுடன் கலந்து சாப்பிடுவதும் பலன் தரும்.
யார் பட்டாணியை சாப்பிடக்கூடாது?
சிலர் பட்டாணியை சாப்பிடவே கூடாது.
- யூரிக் ஆசிட் நோயாளிகள்,
- வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்,
- சிறுநீரகக் கல் உள்ளவர்கள்
போன்றோர் பட்டாணியை குறைவாக சாப்பிட வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பிளாக் காபி vs பிளாக் டீ : காலையில் குடிக்க எது பெஸ்ட்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ