சமையலறையில் இருக்கும் பொருட்கள் பல, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாகவும், அதே ஆரோக்கியத்தைகெடுப்பவையாகவும் இருக்கும். சமையலறையை சுத்தமாக வைத்திராவிடில், வயிறு சுத்தமாக இருக்காது என்பது உறுதி. அந்த சமையலறையில் இருக்கும் பொருட்களும் கூட, சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். இந்த பொருட்களும், மனிதர்களுக்கு வரும் நோய் பாதிப்புகளுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி, புற்றுநோயுடன் தொடர்புடைய சில பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறையில் இருந்தால் அதை கண்டிப்பாக தூக்கி தூர போட்டுவிடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Non-stick சமையல் பாத்திரங்கள்:


பலரது வீட்டு சமையலறையில் இருக்கும் பொதுவான பாத்திர பண்டங்களுள் ஒன்ரு, Non-stick பாத்திரங்கள்தான். இந்த பாத்திரம் ஒரு சைலண்ட் கில்லராக செயல்படுகிறதாம். இதில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருப்பதற்கு perfluorooctanoic அமிலம் கலக்கப்படுகிறது. இதற்கும், புற்றுநோய் பாதிப்புகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிக தீயில் வைத்து சமைக்கும் போது இதில் இருக்கும்  அந்த அமிலங்கள் உணவு பொருட்களில் ஒட்டிக்கொள்ளூமாம். இதனால் உடல் நிலை குன்றுவதோடு மட்டுமன்றி, புற்றுநோயும் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


பிளாஸ்டிக் பாத்திரங்கள்:


சமைலறையில் அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் பாத்திரங்களுள் ஒன்று, பிளாஸ்டிக் பொருட்கள். இது குறித்து பேசும் மருத்துவர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் பிஸ்பெனால் ஏ என்ற அமிலம் கலந்திருப்பதாகவும் பெரும்பாலும் இது சமையல் உபயோகத்திற்காக வாங்கப்படும் பிளாஸ்டிக் பாத்திரங்களில்தான் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். இதனால், ஹார்மோன் கோளாறுகள், நோயெதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுமாம். அது மட்டுமன்றி, இன்னும் பெரிய நோயான கேன்சரில் இது கொண்டு சென்று விடலாம் என மருத்துவ நிபுணர்களால் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை ஈசியா குறைக்க இந்த உணவுகள் போதும்: ட்ரை பண்ணி பாருங்க


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை:


பல உணவு பொருட்களுக்கு இனிப்பு சுவையை கூட்டும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாம் சாப்பிடுவதால் நமக்கு கசப்பான வாழ்க்கை ஏற்படுமாம். இந்த சர்க்கரையை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்கள் வளர வாய்ப்பிருக்கிறதாம். 


பதப்படுத்தப்பட்ட இறைச்சி:


பதப்படுத்தப்பட்ட எந்த பொருட்களுமே உடலுக்கு நன்மை பயக்காது என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்கள், புற்றுநோய் பாதிப்புகளை அதிகமாக்குமாம். இது குறித்து பேசும் மருத்துவர்கள், கண்டிப்பாக இந்த உணவு பொருட்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். 


அடைத்து வைக்கப்பட்ட உணவுகள்:


நாம், நமது சௌகரியத்திற்காக பல சமயங்களில் டிஃபன் பாக்ஸ் அல்லது கேரியரில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளை எடுத்து செல்கிறோம். ஆனால், இதன் மூலம் உறுவாகும் பிஸ்பெனால்ஏ எனும் அமிலம், உடலில் கேன்சர் பாதிப்பை ஏற்படுத்தும் செல்களை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Blood Purifiers: சுத்தமான இரத்தத்தை உருவாக்கும் உணவுகளில் முதலிடம் பிடிப்பது காயா பழமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ