Weight Loss: வெயிட் லாஸ் பண்ணனுமா? தினமும் ஒரு ஸ்பூன் ‘இதை’ சாப்பிடுங்க!
Weight Loss Tips Tamil: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பல சமயங்களில் பலன் இல்லாமல் போகிறது. ஆனால், இதை தவிர்க்க இன்னும் சில வழிகள் இருக்கின்றன.
Lose Weight With One Spoon Turmeric: பலருக்கு, பல்வேறு காரணங்கள் காரணமாக உடல் எடை அதிகரித்து காணப்படலாம். அதை குறைக்க முயற்சிகள் பல மேற்கொண்டும் ஒரு சில காரணங்களினால் கொழுப்பு குறையாமல் எடை குறையாமல் அவதிப்படுவோர் பலர் உள்ளனர். ஆனால், இந்த விடாப்பிடியான கொழுப்பை கரைப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் பல்வேறு வழிகள் உள்ளன. அப்படி, எடையை குறைக்க பயன்படும் உணவு பொருட்களுள் ஒன்று, மஞ்சள். மஞ்சளின் மகத்துவத்தையும், அதனால் ஏற்படும் உடலில் ஏற்படும் பிற நன்மைகளையும் இங்கு பார்ப்போம்.
மஞ்சள்:
உலகளாவிய மஞ்சளின் விநியோகத்தில் இந்தியாதான் 78 சதவிகித மஞ்சளை விளைவிக்கிறது. இவ்வளவு மஞ்சள் வளரும் அதே வேளையில், இந்த மஞ்சள் இந்திய மசாலாக்களுக்கும் பிரபலமானாதாக உள்ளது. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுடன், இருக்கும் இந்த மஞ்சள் நமது சமையலறையில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களுள் முக்கியமானதாகும். இது பல நூறு வருடங்களாக சீன ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மஞ்சள், உடலின் முக்கிய பாகமான கல்லீரலைப் பாதுகாக்க உதவும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், மூட்டுவலியைப் போக்குவதற்கும் பயன்படும் என்றும் சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உடல் எடை குறைப்பு:
அயல்நாட்டில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், மஞ்சள் உடல் எடை குறைப்பிற்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. வயது வந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், டயட்டுடன் தினசரி 800 மில்லிகிராம் மஞ்சளை தங்களது உணவில் சேர்த்துக்கொண்டவர்கள் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளனர். இதற்கு மட்ட்மன்றி, உணவில் சுவை சேர்க்கவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் மருத்துவ நன்மைகள் அழற்சியையும் தடுக்கிறது. அதனால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தங்களது தினசரி உணவில் டய்டுடன் சேர்த்து தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர்.
மேலும் படிக்க | கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் சுகர் லெவலின் அறிகுறிகள் என்ன?
மஞ்சளின் பிற நன்மைகள்..
மலச்சிக்கலை தவிர்க்கும்:
மஞ்சள் செரிமானத்தை மேம்படுத்துவதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது. மஞ்சள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது வயிறு வீக்கத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது. இதனால் செரிமானத்தை ஏற்படுத்தும் பித்தப்பை, குடல் உள்ளிட்டவை சரியாக செயல்படுகின்றன. இதன் காரணமாக மலச்சிக்கல் வராமல் மஞ்சள் தடுக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது:
மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு ஆகியவற்றைக் சேர்த்த தேநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு திறன்கள் நம் உடலில் உள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தியாக மாற்றுகிறது. இரத்த ஓட்டத்தை சீர்செயவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
இருதய பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது:
இருதயம் தொடர்பான பிரச்சனைகள் வரமல் காக்கும் உணவுகளுள், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் இருக்கும் குர்குமின் எனும் சத்து ரத்த ஓட்டத்தை அடர்த்தியாக்கி, கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும், இருதயத்தை சுத்தி இருக்கும் தமனிகள் எனும் பாகத்தையும் இது பாதுகாப்பதாக சில மருத்துவ ஆராய்ச்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இருதய நோய் பாதிப்புகள் மஞ்சளை உணவில் சேர்த்து கொள்பவர்களை அவ்வளவு எளிதில் அண்டாது என கூறப்படுகிறது. இருப்பினும், இதை உறுதி செய்ய சரியான சான்றுகள் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | எலும்பு மெலிதல் நோயை தடுக்கும் ‘சூப்பர்’ ஜூஸ்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ