கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் சுகர் லெவலின் அறிகுறிகள் என்ன?

Diabetes Symptoms: நீரிழிவு நோயை முற்றிலுமாக சரி செய்ய முடியாது. ஆனால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலமும், உணவு முறையை மாற்றுவதன் மூலமும் அதை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2024, 09:33 PM IST
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • அதிகப்படியான சோர்வு.
  • அடிக்கடி பசி எடுப்பது.
கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் சுகர் லெவலின் அறிகுறிகள் என்ன? title=

Diabetes Symptoms:  தவறான உணவுப் பழக்கம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் மக்களிடையே கரையான் போல் பரவி வருகிறது. இந்த நோய் படிப்படியாக உடலை தாக்குகிறது. நீரிழிவு கணையம், இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா? 

நீரிழிவு நோயை முற்றிலுமாக சரி செய்ய முடியாது. ஆனால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலமும், உணவு முறையை மாற்றுவதன் மூலமும் அதை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். 

உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதோ குறைவதோ நல்லதல்ல. இதனை கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதும், முறையான சிகிச்சை எடுக்காமல் இருப்பதும்தான்  சர்க்கரை நோய் அதிகமாவதற்கு காரணம் ஆகும். 180 (மிலி/டிஎல்) அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை அளவு கட்டுப்பாடற்றதாக கருதபடுகின்றது. கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு காரணமாக, நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயில், குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுவது கடினமாகிறது. ஆகையால் இது உடலை பாதிக்கத் தொடங்குகிறது. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் 5 அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் (Symptoms of Diabetes)

1. மங்கலான பார்வை (Blurry Vision)

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால், கண்களில் திரவம் குவியத் தொடங்குகிறது. இதனால் லென்ஸின் வடிவத்தில் சிறிது மாற்றம் ஏற்படுகிறது. இது தவிர, கண் பார்வையும் காலப்போக்கில் மாறுகிறது. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால், கண்களின் விழித்திரை சேதமடைந்து, நீரிழிவு விழித்திரைப் பிரச்சனை  (Diabetic Retinopathy) ஏற்படுகிறது.

2. அடிக்கடி பசி எடுப்பது (Contstant Hunger)

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயில், தொடர்ந்து பசி எடுக்கும் உணர்வு இருக்கும். நீரிழிவு நோய் கட்டுப்பாடற்றதாக மாறும் போது, ​​குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றப்படாது. மூளைக்கு ஆற்றல் குறைவு என்ற செய்தி வந்ததும், அதிக பசி எடுக்கத் தொடங்குகிறது. இதனால் நாம் அதிகமக சாப்பிடுகிறோம். அதிகமாக சாப்பிடுவது எடை கூடுவதற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் ‘சில’ அறிகுறிகள்

3. அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis Nigricans)

அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்பது ஒரு நிறமி கோளாறு. இந்த சரும பிரச்சனையில் சருமத்தின் நிறம் கருமையாகிவிடும். உடலில் சர்க்கரை அளவு காரணமாக இந்த வகையான பிரச்சனை காணப்படுகிறது. அக்குள் அல்லது கழுத்துப் பகுதியில் கருமையான தோல் தெரியும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent Urination)

சிறுநீர் கழிக்க இரவில் அடிக்கடி எழுந்திருக்க வேண்டியிருந்தால், அது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) கட்டுப்படுத்தவில்லை என்றால், உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், அந்த நபர் மீண்டும் மீண்டும் தாகத்தை உணர்கிறார். இதன் காரணமாக, குமட்டல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

5. அதிகப்படியான சோர்வு (Extreme Fatigue)

கட்டுப்பாடற்ற நீரிழிவு தீவிர சோர்வை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே உடல் பருமன், மனச்சோர்வு, தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சோர்வு மிகவும் பொதுவான ஒன்றாகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 40 பிளஸ் பெண்களுக்கான எடை இழப்பு டிப்ஸ்!! தொப்பை கொழுப்பை ஈசியா குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News