"சினிமாக்களில் ஹீரோக்கள் ஸ்டைலாகப் புகைபிடிக்கும் காட்சிகள்",  ‘தம் அடிச்சாதான் ஒரு கிக்கே வருது மச்சி’ என்ற இளைஞர்களின் டீக்கடை உரையாடல்,  ‘டென்ஷனா இருக்கு... ஒரு தம் போட்டாதான் கரெக்டா இருக்கும்’ என்ற பிம்பம் போன்ற வாழ்வியல் சூழல் நம் சமூகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி உள்ளது என்றால் அதற்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. புகை பிடிப்பதை ஒரு கவுரவமாகப் பார்க்கும் சமூகம் தழைத்தோங்கியுள்ளது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கி.மு 5000–3000 வரை மெசோ அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில்தான் புகையிலைப் பயன்பாட்டின் நடைமுறை முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியக் குடியேற்றவாசிகளால் புகையிலை யூரேசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக புகையிலைப் பயன்பாடு பரவிக் கிடக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிருந்துதான் வந்தது புகையிலை பழக்கம்  


அதனைத் தொடர்ந்து 1920ஆம் ஆண்டிற்கு முந்தைய சில ஆண்டுகளாக ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரு புதுவிதமான நோய் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் அந்த ஆண்டின் பிற்பகுதியில் புகைபிடித்தலால் நுரையீரல் பாதிக்கப்படுவதையும் அது காலப்போக்கில் புற்றுநோயாக மாறுவதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதற்கு இந்த ஆய்வு மக்கள் மத்தியில் புகை பிடித்தல் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வழிவகை செய்தது. ஆனால் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஜெர்மன் ஆய்வாளர்களின் அந்த ஆய்வுக்குப் பிறகு 1950ஆம் ஆண்டில் அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரிட்டீஷ் ஆராய்சியாளர்கள் புகை பிடிப்பதற்கும் புற்றுநோய்க்கும் இடையே உள்ள நெருக்கத்தை ஆய்வின் மூலம் உறுதி செய்தார்கள். 


மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!


புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு 


அந்த ஆய்வில் ஒரு நபர் புகை பிடிக்கும்போது புகையை உள்ளே இழுத்து வெளியே விடுகிறார். அப்போது, அவருடைய நுரையீரல் வரை செல்லும் அந்தப் புகை ஆல்வியோலி அல்லது வாய்வழி சளி வழியாக உறிஞ்சப்படுகிறது எனவும் அந்தப் புகையின் தன்மை உடலில் உள்ள நரம்புகளில் ரசாயன எதிர்வினைகளைத் தூண்டிவிடுகிறது எனவும் கூறியுள்ளனர். மேலும், இதன் விளைவாக இதயத்தின் துடிப்பு அதிகரித்தல், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும் எனக் கூறியுள்ள ஆய்வாளர்கள், புகையை உள்ளே இழுத்து வெளிவிடும்போது, டோபமைன் மற்றும் எண்டோர்பின்கள்  வெளிவரும் நிலையில் அவை புகை பிடிக்கும் நபருக்கு இன்பத்தைத் தூண்டி அந்தப் பழக்கத்திற்கு மூளையை அடிமையாக்கும் எனவும் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



புகையிலை பயன்பாட்டிற்கு அடிமையாகும் இந்தியர்கள் 


இந்தியாவில் கடந்த 2008 முதல் 2010ஆம் ஆண்டுவரை 49 சதவீதம் ஆண்களும் 11 சதவீதம் பெண்களும் புகைபிடித்து வந்த நிலையில் தற்போது அது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் முதல் புகை பழக்கத்தின் ஈர்ப்பு குறித்துக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள், விளம்பரங்கள் மற்றும் சினிமாக்களைப் பார்த்துதான் புகை பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். மேலும் பலர் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களைப் பார்த்துப் பழகியதாகவும் கூறுகிறார்கள். 


மேலும் படிக்க | ஒயின் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்


புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.., புகையிலை உயிரைக் கொல்லும்.., புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்ற வாசகங்கள் சிகிரெட் பாக்கெட்டுகள் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை பல இடங்களில் பார்த்திருப்போம். வாசகங்கள், வாசகங்களாக மட்டுமே உள்ளதே தவிர மாற்றங்கள் ஏதும் இல்லை என ஆய்வுகள் பல குறிப்பிடுகின்றன. இந்தியாவில் புகை பிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருவதாகவும், புகை பிடிப்பவர்களில் 94 சதவீதம் பேர் அதை முற்றிலுமாக கைவிடத் தயாராக இல்லை எனவும் புகையிலை கட்டுப்பாட்டு மதிப்பீட்டு திட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 - 2021ஆம் ஆண்டில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் புகையிலை பயன்பாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் மார்த் 9ஆம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் புதன் கிழமைகளில் புகையிலை பிடிக்காத நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புகை பிடித்தலால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்போம். புற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்போம்.


மேலும் படிக்க | சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!


சரி இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிப்பது எப்படி.., மருத்துவரிடம் ஆலோசனை கேட்டோம். அதற்கு அவர் கூறிய சில அறிவுரைகளை பார்க்கலாம்., 


1. அதாவது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நபர் காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழ சாற்றை கலந்து சுவைக்காக தேன் கலந்து நாள்தோறும் பருகவேண்டும்.


2. உணவு பழக்கத்தில், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களுக்கு புகைப்பிடிக்கும் வேட்கையை அடக்கும் தன்மை இயல்பாகவே உள்ளதால் அவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 


3. புகைப்பிடிக்க வேண்டும் என தோன்றும் நேரங்களில் எல்லாம் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன் என்ற உங்கள் இலக்கை நினைவுபடுத்தி அதை ஆணித்தரமாக செயல்படுத்த வேண்டும். 


4. நாள்தோறும் மூச்சுப் பயிற்சி செய்வது, தண்ணீர் அதிகமாக குடிப்பது உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்கள் புகைபிடித்தல் பழக்கத்தில் இருந்து உங்களை விடுவிக்க உதவும். 


5. பெற்றோர் குழந்தைகள் முன்பு புகைபிடிக்ககூடாது. அவர்களுக்கு அதன் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ள எவ்வித செயல்களையும் அனுமதிக்ககூடாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


 


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR