பார்க்க அழகா இருக்கு சுவையா இருக்குன்னு ‘இதை’ அதிகம் சாப்பிட்டா பிரச்சனை தான்
Alert For Tomato Lovers: தக்காளியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை என அலர்ட் செய்தி கொடுக்கும் கட்டுரை இது. தக்காளியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆனால் தக்காளியை அதிகமாக உட்கொண்டால், உடல்நிலை மோசமடையக்கூடும்
தக்காளியின் சுவையும் நிறமும் தக்காளியை விரும்பி சாப்பிட அனைவரையும் தூண்டுகிறது. சாப்பிட சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும் தக்காளி, சிலருக்கு தீமைகளையும் ஏற்படுத்தும் தெரியுமா? நீங்களும் தினமும் தக்காளி சாப்பிடுபவரா? இந்தக் கட்டுரையைப் படித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது எது என்ற தெளிவு பிறாக்கும்.
சாப்பிட சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும் தக்காளியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகின்றன. தக்காளியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆனால் தக்காளியை அதிகமாக உட்கொண்டால், உடல்நிலை மோசமடையக்கூடும். தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
அமிலத்தன்மை பிரச்சனை
தக்காளியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது. ஏனெனில் இதில் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால், அசிடிட்டி பிரச்சனை தொடங்குகிறது. ஏற்கனவே அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக உட்கொள்ள கூடாது.
மேலும் படிக்க | என்ன பண்ணாலும் உடல் எடை குறையலயா? இதை குடிச்சி பாருங்க, உடனே குறையும்!!
கால்குலஸ்
தக்காளியை சாப்பிடுவதால் கல் பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் தக்காளியில் காணப்படும் விதைகள் சிறுநீரகத்தை எளிதில் சென்றடைந்து கற்களை உருவாக்கத் தொடங்கும். இதன் காரணமாக அதிக தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனால் தக்காளியை அதிகமாக சாப்பிடக்கூடாது.
நெஞ்செரிச்சல்
தக்காளியை அதிகமாக உட்கொள்வது நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் வாயு பிரச்சனைகளை உண்டாக்கும் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனை அதிகரிக்கும்.அதிகப்படியாக வைட்டமின் சி உட்கொள்வததைத் தவிர்த்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனை தீரும்.
லிகோபேண்டோர்மியா
தக்காளியில் லிகோபேன் என்ற சேர்மம் உள்ளது. உடலில் அதிகளவு லிகோபேன் சேர்வது லிகோபேண்டோர்மியா என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த னாய் ஏற்பட்டால் சருமத்தில் ஆங்காங்கே அடர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இது ஆரோக்கியத்தை பாதிக்க விட்டாலும் தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | Cloves Benefits: வெறும் வயிற்றில் 2 கிராம்பு…இவ்வளவு நன்மைகள் இருக்கா?
உடல் துர்நாற்ற பிரச்சனை
தக்காளியில் டெர்பென்ஸ் என்ற தனிமம் காணப்படுவதால் தக்காளியை அதிகம் சாப்பிடுவதால் உடல் துர்நாற்றம் பிரச்சனை அதிகரிக்கும். இது உடலில் துர்நாற்றம் வீசும் என்பதால், நமக்கு மட்டுமல்ல, நம் அருகில் வருபவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
மூட்டு வலி
தக்காளியை அதிகமாக உட்கொண்டால் மூட்டு வலி ஏற்படும். தக்காளியில் சோலனைன் என்ற அல்கலாய்டு இருப்பதால், மூட்டுகளில் வீக்கம் பிரச்சனை ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: உடல் எடையை குறைக்க உப்பைக் குறைத்தால் வரும் பிரச்சனைகள் இவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ