தக்காளி விலை கடும் வீழ்ச்சி தென்காசி விவசாயிகள் வேதனை

தென்காசி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2022, 05:35 PM IST
  • தக்காளி விலை கடும் வீழ்ச்சி
  • தென்காசி விவசாயிகள் வேதனை
தக்காளி விலை கடும் வீழ்ச்சி தென்காசி விவசாயிகள் வேதனை  title=

தென்காசி சுந்தரபாண்டியபுரம் பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விவசாயிகளிடம் கேட்கிறார்கள். வியாபாரிகள், 1 கிலோ தக்காளி ரூ.2-க்கு கேட்கிறார்கள். அவ்வாறு சில வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி சந்தையில் ரூ.7-க்கு விற்கிறார்கள். 

இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் சாலை ஓரங்களில் கடை அமைத்து  தக்காளிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி பகுதிக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளிடம் 30 கிலோ தக்காளியை 250 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். ஓசூரில் இருந்து தக்காளி கன்றுகளை கொண்டு வந்து விவசாயம் செய்யப்படுகிறது.  இந்த கன்றுகளை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை  விலைகொடுத்து விவசாயிகள் வாங்குகின்றனர்.

தக்காளிகளை பறிப்பதற்கு தொழிலாளி ஒருவருக்கு ரூ.500 வரை கூலிகொடுக்கப்படுகிறது. ஆனால் வியாபாரிகள், தக்காளி விலையை மிகவும் குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதன் காரணமாக சாலைக்கு வந்து விவசாயிகள் நேரடியாக தக்காளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. மேலும் சின்ன வெங்காயம், வெண்டைக்காய் போன்றவற்றின் விலையும் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை குறைவு தங்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கச் செய்திருப்பதாகவும் அவர்கள் வேதனைதெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ - மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புலம்பல்

மேலும் படிக்க | தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News