Diabetes Control Tips: நீரிழிவு நோயால், உலகெங்கிலும் உள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பலர் தங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமாகிறது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் கடைபிடிக்க வெண்டி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டைப் 2 நீரிழிவு நோய்க்கான மசாலா:


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். மேலும் இதனால் சிறுநீரகம் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. குளுக்கோஸ் அளவை பராமரிக்க, நீங்கள் ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ள வேண்டும். நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சில மசாலா பொருட்கள் (Spices For Type 2 Diabetes) சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


நீரிழிவு நோயாளிகள் இந்த மசாலாக்களை சாப்பிட வேண்டும்


1. மஞ்சள்


மஞ்சளில் குர்குமின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இந்த மசாலாவில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் பால் குடித்தால் சுகர் லெவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இலவங்கப்பட்டை: நீரிழிவு நோய் முதல் எடை இழப்பு வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம்


2. வெந்தய விதைகள்


வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால், அது டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இந்த மசாலாவில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது, எனவே கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வடிகட்டி குடிக்கவும்.


3. கொத்தமல்லி விதைகள்


மல்லி விதைகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றன என்பதும், இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைப்பு செயல்முறையை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதும் பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தனியாவை சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. இதன் மூலம் நன்மை பெற,  தூங்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து, காலையில் எழுந்ததும், இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.


4. இலவங்கப்பட்டை


சர்க்கரை நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை ஒரு சிறந்த தீர்வாக அமையும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேர்வதையும் அனுமதிக்காது. இதன் மூலம் அதிகபட்ச நன்மை பெற, ஒரு கிளாஸ் பாலை சூடாக்கி, அதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அஞ்சறைப் பெட்டி அதிசயம்: ட்ரை பண்ணி பாருங்க


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ